செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

தேவையில்லாத பெண்கள் சகவாசம், டேமேஜ் ஆன ஹீரோவின் பெயர்.. வெளிப்படையாக அரங்கேறும் கூத்து

ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இப்போது புகழின் உச்சியில் இருக்கும் ஒரு ஹீரோவை பற்றிய செய்தி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில நடிகர்களை பற்றி பல செய்திகள் வெளி வந்தாலும் அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் இந்த ஹீரோவை பற்றி வந்திருக்கும் இந்த செய்தி நம்ப முடியாத படி இருக்கிறது.

அந்த அளவுக்கு இந்த ஹீரோ ரசிகர்கள் மனதிலும் ரியல் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட இவர் சமீப காலமாக பெண்கள் சகவாசத்தில் மூழ்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மொழிகளிலும் பிரபலமான ஒருவராக மாறி இருக்கும் இந்த ஹீரோ இப்போது நிற்க கூட நேரமில்லாமல் நடித்து வருகிறார்.

Also Read: கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை

அப்படி அவர் சூட்டிங் போகும் இடங்களுக்கு எல்லாம் கூடவே இரண்டு பெண்களை அழைத்து செல்கிறாராம். திடீரென நடிகருடன் இவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கும் அந்த பெண்கள் அவருக்கு முழு அரணாகவும் மாறி இருக்கிறார்கள். அதாவது யாராவது நடிகரை சந்தித்து கதை சொல்ல வேண்டும் என்றால் கூட அந்தப் பெண்கள் மனது வைத்தால் தான் முடியுமாம்.

அந்த அளவுக்கு நடிகரின் தரப்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதாம். இப்படி பல நிபந்தனைகள் போடும் நடிகரிடம் கதை சொல்ல அணுகவே பல இயக்குனர்களின் தயங்கி வருகிறார்கள். மேலும் அவருடைய பெயரும் இதனால் பயங்கர டேமேஜ் ஆகி இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக இதற்கு நடிகர் கூறும் காரணம் தான் வியப்பாக இருக்கிறது.

Also Read: கணவனை கழட்டி விட்டு கவர்ச்சியில் இறங்கிய நடிகை.. உடல் ஒத்துழைக்காததால் 25 கோடி நஷ்டம்

அதாவது அந்த இரண்டு பெண்களும் நடிகருக்கு நடிப்பு பயிற்சி கொடுப்பதால் தான் சதா நேரமும் கூடவே இருக்கிறார்களாம். இப்படி ஒரு கட்டுக்கதையை தான் நடிகர் அவிழ்த்துவிட்டு வருகிறார். ஆனால் இதை கொஞ்சம் கூட யாரும் நம்பவில்லை. ஏனென்றால் நடிகர் எந்த அளவுக்கு எதார்த்தமாக நடிக்கக் கூடியவர் என்று அனைவருக்கும் தெரியும். அதனாலேயே அவருடைய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக அனைவரையும் கவர்ந்து வருகிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த நடிகருக்கே நடிப்பு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு அந்தப் பெண்கள் மிகப்பெரிய ஆட்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இருப்பினும் நடிகர் இப்படி ஒரு பொய்யை கூறி தான் அனைவரையும் ஏமாற்றி வருகிறார். இவ்வாறு நடிகர் நல்லா இருந்த பெயரை தானே கெடுத்துக் கொண்டாரே என்று பலரும் தலையில் அடித்தபடி இந்த விஷயத்தை கடந்து போகிறார்கள்.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட்க்கு அப்பா வேண்டாம் மகனுக்கு ஓகே சொன்ன நடிகை.. இப்ப 40 வயதில் சீரியலை ஆட்டிப்படைக்கும் அம்மணி

Advertisement Amazon Prime Banner

Trending News