பெரும் தொழிலதிபர்களை தொடங்கி சிறு குறு விற்பனையாளர்கள் வரை என எல்லோருக்கும் பொதுவானது வருமான வரி சோதனை. இப்படியான வருமான வரி சோதனை சிறிதளவேனும் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் சொத்து மதிப்பு இருக்குமாயின் துறைசார்ந்த அலுவலர்களால் நடத்தப்படுவது வழக்கம். வழக்கம் வழக்கொழிந்து போனது போல் இப்போது ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறும் பலருக்கும் இப்படியான விடயங்கள் நடந்தேரி வருகின்றன.
தளபதி விஜய்: சமீபத்தில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் பிசியாக இருந்த தளபதிக்கு தலைவலியாக அமைந்தது இந்த ஐ.டி ரெய்டு. வாத்தி ரெய்டு ஐ.டி ரெய்டு விட்டாலும் வாத்தி விட்ட சைக்கிள் ரெய்டு பெருமளவு பேசப்பட்டது.
தல அஜித்: 2007ல் பில்லா வெளிவந்த சில தினங்களிலேயே தலயை சிக்கலுக்கு உள்ளாக்க தயாரானது வரித்துறை. திருவான்மியூரில் உள்ள தல அஜித்தின் வீட்டில் சுமார் 10 மணி நேரம் நடந்த ரெய்டில் ஏதும் சிக்காமல் வெளியேறிது வரித்துறை.
தலைவர் ரஜினி: இந்திய மதிப்பில் சுமார் 800+கோடிகளுக்கு சொத்து வைத்திருக்கும் நடிகர் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நெய்வேலியில் தளபதியை பதம் பார்த்த கையோடு கையேடுகளை நிறைக்க வந்தது வரித்துறை. சுமார் 6.4லட்சங்கள் வரிபாக்கி உள்ளதாக தகவல் வெளியானது.
உலகநாயகன் கமல் ஹாசன்: தமிழ் சினிமாவின் சினிமா விவசாயி கலை உலகின் ஆண்டவர் என எல்லாவுமாய் கூறப்படுபவர் கமல்ஹாசன். நடிகர்கள் பலரும் ரசிகர் மன்றங்கள் துவங்கிய காலத்திலேயே கமல்ஹாசன் மட்டு்ம் நற்பணி மன்றமாய் துவங்கியவர். 2021ல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் சோதனை நடந்தது. அதற்கான அறிக்கையை தரும்படி இப்போது வரை கேட்டு வருகிறார்.
ரஷ்மிகா மந்தனா: தெலுங்கு மற்றும் தமிழில் அதிவேகமாய் வளர்ந்து வருபவர் நடிகை ரஷ்மிகா. எக்பிரசன் குயின் ரியாலிட்டி ஏஞ்சல் என பல்வேறு ரசிகர்களால் கொண்டாடப்படும் அம்மனிக்கும் அடித்தது ஒரு ரெய்டு. அதிவேகமாய் வளர்ந்தாலும் சரியான வரிகளால் வரித்துறையையே திணரடித்து விட்டார் அம்மனி.
யஷ்: கே.ஜி.எஃப் சேப்டர்1 வழியாக இந்தியாவே கொண்டாடும் நாயகன் யஷ். நடிப்பு சமூக்சேவை என மிரட்டல் தரும் நாயகனுக்கும் அடிக்கப்பட்டது ஐ.டி ரெய்டு ஏதும் சிக்காமல் போனதும் சிறகடித்து பறந்தது வரித்துறை.
கிச்சா சுதீப்: கன்னடம் தெலுங்கு தமிழ் என எல்லா பக்கமும் பரிட்சயமானவர் நடிகர் சுதீப் . கிச்சா என செல்லமாக அழைக்கப்படும் சுதீப் நான் ஈ படத்தின் ஹீரோவாகவே மாறிப்போனார். நான் ஈ படம் ரிலீசான சில தினங்களிலேயே ஐ.டி.ரெய்டில் சிக்கினார் சுதீப். வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ஏதும் சிக்கவில்லை.