ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

பாக்ஸ் ஆபீஸ் கிங் எப்போதுமே தலைவர் ரஜினி தான்.. பலமுறை 100 கோடி வசூலை தாண்டிய 5 நடிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது படத்தின் வசூல் தான். படத்திற்காக எடுக்கப்பட்ட பட்ஜெட்டை விட அதிகமாக வசூல் செய்தால் அப்படம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் உலக அளவில் 100 கோடியை தாண்டி வசூல் செய்த முன்னணி நடிகர்களின் படங்களை பார்க்கலாம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிஸ்டில் பலமுறை 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தவர்கள்.

ரஜினிகாந்த்: தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக வசூலில் சாதனை படைத்து வருபவராக உள்ளவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியான சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி, காலா, பேட்ட, 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய 9 படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

விஜய்: கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் மாஸ்டராக இருந்து வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் ஆகிய படங்கள் 100 கோடியைத் தாண்டி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது.

அஜித்: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியான விவேகம், விஸ்வரூபம், நேர்கொண்ட பார்வை, என்னை அறிந்தால் ஆகிய படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றுள்ளது.

சூர்யா: தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகர்களில் விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு, சிங்கம் 2, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், சூரரைப் போற்று ஆகிய படங்கள் 100 கோடி வசூல் செய்துள்ளது.

கமலஹாசன்: கமலஹாசன் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, அரசியல் என அனைத்து துறைகளிலும் கால் பதித்தவர். இவர் நடிப்பில் வெளியான தசாவதாரம், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டியது.

ஜெயம் ரவி, கார்த்தி, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், சிலம்பரசன் ஆகியோர் தலா ஒரு படம் அதாவது தனி ஒருவன், கைதி, அசுரன், ஐ, டாக்டர், மாநாடு ஆகிய படங்கள் 100 கோடி வசூலை தாண்டி உள்ளது.

Trending News