தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவை விட வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர்களிலும் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருந்தால் வில்லனாக நடிக்கவும் தயங்குவதில்லை. அந்த வகையில் 2021 ல் வில்லனாக மிரட்டிய 5 கதாபாத்திரத்தை பார்க்கலாம்.
விஜய் சேதுபதி: இந்த ஆண்டு விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ஏதும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பவானி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
எஸ் ஜே சூர்யா: எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்த படங்களை காட்டிலும் வில்லனாக நடிக்கும் படங்களே அவரை பெரிய அளவில் பேசப்படுகிறது. இவர் வில்லனாக நடித்த மெர்சல் படத்தில் அனைவரது கவனத்தை ஈர்த்தார். அதேபோல் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் போலீஸ் அதிகாரி தனுஷ்கோடி ஆக மிரட்டியுள்ளார்.
நட்டி நடராஜ்: சதுரங்கவேட்டை படத்தின் மூலம் பிரபலமானவர் நட்டி நடராஜ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரி கண்ணபிரான் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கர்ணன் படத்தில் இவரது நடிப்பை பார்த்து பல பிரபலங்களும் இவரை வாழ்த்தினார்கள்.
வினய்: உன்னாலே உன்னாலே படத்தின் முலம் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் வினய். ஹீரோவாக நடித்து வந்த வினய் துப்பறிவாளன் படத்தின் மூலமாக வில்லனாக நடிக்கத் தொடங்கினார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் குழந்தைகளை கடத்தி தொழில் பண்ணும் டானாக டெரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஜான் கோக்கன்:
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகிய மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஜான் கோக்கன் ஆர்யாவுக்கு எதிராக பாக்ஸிங் பண்ணும் வேம்புலியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சார்பட்டா பரம்பரை படத்திற்கு முன்பாக குஸ்தி, வீரம் படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஜான் கோக்கனக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் தான் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.