தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் முதலில் ஒரு நடிகருக்கு கதை எழுதி வைப்பார்கள். பின்பு கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போய் வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் இவர்கள் தேர்ந்தெடுத்த நடிகரை விட சந்தர்ப்ப சூழ்நிலையில் கிடைக்கும் நடிகரை வைத்து எடுத்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெரும்.
கரிகாலன்: விக்ரம், சரின்கான் மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்தனர். பின்பு ஏதோ ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.
மருதநாயகம்: கமல்ஹாசன் நடிப்பில் வரலாற்றுப் படமாக அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய படம் மருதநாயகம். இப்படத்தின் பூஜைக்காக இங்கிலாந்து இளவரசி எலிசபெத் குயின் பங்கேற்றார்.
மிகப் பெரிய எதிர்பார்ப்பிலிருந்த இப்படம் மிகப்பெரிய பொருட்செலவு ஏற்பட்டதால் அதன்பிறகு பெரிய அளவு செலவு செய்ய முடியாமல் அப்படியே உள்ளது.
சென்னையில் ஒரு மழைக்காலம்: புதுமுக நடிகருடன் திரிஷா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் கதை ஐடி வேலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்பு என்ன நடக்கிறது என்பது தான் கதை. இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வந்தார் பின்பு ஏதோ ஒரு சில பிரச்சனைகளால் இப்படமும் கைவிடப்பட்டது.
கெட்டவன்: சிம்புவின் கெட்டவன் மற்றும் வேட்டை மன்னன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி பின்பு ஏதோ ஒரு சில காரணங்களாலும் கைவிடப்பட்டது.
ஜக்குபாய்: ஜக்குபாய் படத்தில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தான் கேஎஸ் ரவிக்குமார் இயக்க இருந்தார். படத்துக்குஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க காத்திருந்தார். ஆனால் இப்படம் பாட்ஷா மாதிரியே இருப்பதால் கதை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு ரஜினிகாந்த நிராகரித்துள்ளார்.
பின்பு தான் கேஎஸ் ரவிக்குமார் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்து சரத்குமாரை வைத்து ஜக்குபாய் எனும் பெயரில் படத்தை வெளியிட்டார்.
யோகன் அத்தியாயம் ஒன்று: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு திரில்லர் மற்றும் ஸ்டைலிஸ் மூவி யாக வசூல் மன்னன் விஜய் வைத்து உருவாக இருந்தது.
ஆனால் ஏதோ ஒரு சில காரணங்களால் இப்படமும் கைவிடப்பட்டது.
ஆனால் படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் எப்படியாவது விஜய் வைத்து ஒரு படம் இயக்குவேன் என கங்கணம் கட்டி திரிகிறார்.