வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பாலிவுட்டை தொடர முடியாமல் போன 9 தமிழ் பிரபலங்கள்.. 38 படங்களுக்குப் பின் கும்பிடு போட்ட சோகம்!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி தென்னிந்திய நடிகர்கள் பெரும்பாலும் பாலிவுட்டில் பெரிய அளவு வெற்றியை பெற்றதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக சில நடிகர்களின் பட்டியலை பார்ப்போம்.

தனுஷ்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய கதாபாத்திரங்களில் ரசிகர்களின் மனதில் பதிய வைக்கும் அளவிற்கு சிறப்பாக நடிப்பவர். அவர் பாலிவுட்டில் 2 படங்கள் நடித்தார் எனினும் அந்த படங்கள் பெருமளவில் வெற்றியை பெறவில்லை.

dhanush-cinemapettai
dhanush-cinemapettai

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளியானால் போதும் பிரமாண்டமாக இருக்கும். ரஜினியின் ஸ்டைலுக்கு அனைத்து சினிமா உலகமும் ரசிகர்களாக இருக்கின்றனர் . பாலிவுட்டில் 38 படங்கள் நடித்திருந்தார் எனினும் அவை பெருமளவு வெற்றி பெறவில்லை என்பதால் அவர் பாலிவுட்டில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

rajinikanth-cinemapettai
rajinikanth-cinemapettai

திரிஷா: திரிஷா தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர். அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த Khatta Meetha என்ற திரைப்படம் வெற்றியடையவில்லை. இதைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

trisha-cinemapettai
trisha-cinemapettai

காஜல் அகர்வால்: காஜல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வெற்றி பெற்றவராவார். அவருடைய நடிப்பு இந்தியில் அந்த அளவிற்கு வெற்றி அடையாத நிலையில் மெதுவாக பாலிவுட்டை விட்டு விலகினார்கள்.

kajal-agarwal
kajal-agarwal

சூர்யா : முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா கடின உழைப்புபின் மூலமாக தந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தவர். இந்தியில் “ரத்த சரித்திரம்” என்ற திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். இருப்பினும் தொடர்ந்து பாலிவுட்டில் வராத சூர்யாவை ரசிகர்கள் பாலிவுட் திரைப்படத்தில் பார்க்க ஏக்கம் கொள்கின்றனர்.

suriya-cinemapettai
suriya-cinemapettai

தமன்னா: பாலிவுட்டில் முதன்முதலாக அறிமுகமானவர். இருப்பினும் இந்தி திரைப்பட துறையில் வெற்றி அடையாத நிலையில் இவர் தமிழ் சினிமாவில் பயணித்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார் தமன்னா.

thamanna

ஸ்ரேயா: தமிழ் திரை மட்டுமின்றி தெலுங்கு திரைத்துறையிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். பாலிவுட்டில் Drishyam போன்ற படங்களில் ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தார். இருப்பினும் அவர் பாலிவுட்டில் தொடரவில்லை.

shriya-cinemapettai-00
shriya-cinemapettai-00

ஸ்ருதிஹாசன்: கமலஹாசனின் மகளான ஸ்ருதி பாடகியாகவும், நடிகையாகவும் இருக்கிறார். தமிழை விட இந்தி படங்களில் பெரும்பாலும் நடிக்கிறார். இருப்பினும் பாலிவுட்டில் பெரும் வெற்றியைப் பெறவேண்டும் என்பதை அவருடைய விருப்பமாக உள்ளது.

shruthi-hassan-cinemapettai
shruthi-hassan-cinemapettai

கமலஹாசன்: கமலஹாசன் பல்வேறு மொழிகளில் நடித்து தனது நடிப்பை மட்டும் என்று தயாரிப்பாளர், நடன கலைஞர், பாடகர் என்ற பல முகங்களை கொண்டவர். பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையிலும் அவர் தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்க வில்லை. தமிழ் சினிமா துறையில் தொடர்ந்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

kamal haasan
kamal haasan

Trending News