சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

யாஷிகா போல ஃபுல் போதையில் விபத்து ஏற்படுத்திய 5 பிரபலங்கள்.. இதுல நாலு பேரு வாரிசு நடிகர்கள்!

விபத்து சாலையாக மாறுகிறதா ஈசிஆர் ? நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலை உள்ளது. சாலை விபத்தில் அதிகமாக உயிர் இழந்தோர் பட்டியலில் இந்தியாவும் இருப்பது வருத்தத்திற்குரிய தாகும். சாலை விபத்துக்களால் மட்டும் ஒரு ஆண்டுக்கு மூன்று லட்சம் பேருக்கு அதிகமானோர் உயிரிழப்பதாக ஓர் அறிக்கை கூறுகிறது.

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சாலை விதிகளை மீறுவது. மேலும், குடிபோதையில் வாகனங்களை இயக்கும் போது விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. இந்த வகை விபத்துகளில் பிரபலங்களும் அடிக்கடி வருவதை நாம் பார்க்கிறோம். தற்போது வைரலாக பரவி வருவது நடிகை யாஷிகாவின் கார் விபத்து.

காரை ஓட்டி சென்ற யாஷிகா ஆனந்த் தப்பிவிட்டார் எனினும் அவருடன் பயணித்த அவர் தோழி பரிதாபமாக உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. யாஷிகா மட்டுமின்றி மேலும் பல பிரபலங்கள் இதுபோன்ற சாலை விபத்துக்களை ஏற்படுத்தி உள்ளனர்.

Yashika-CinemapettI.jpg
Yashika-CinemapettI.jpg

இதில் பிரபல இயக்குநர் பி. வாசுவின் மகன் சக்தி, நடிகர் ஜெய், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா, நடிகர் அருண் விஜய் மற்றும் துருவ் விக்ரம் போன்ற பல பிரபலங்களும் சாலை விபத்துகளை ஏற்படுத்தியவர் ஆவார்கள். இவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாலும் பிரபலங்களும் வசதி படைத்தவர்களின் வாரிசுகளாக மட்டும் உடனே ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள்.

குடிபோதையில் கார் ஓட்டினால் ரூபாய் 10 ஆயிரமும் விபத்தில் உயிரிழந்தாள் அந்த குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் என்று கூறப்படுகிறது. சட்டத்தின் தண்டனைகள் அதிகமானால் தவிர இந்த விதமான குற்றங்களை தடுக்க முடியாது என்று பலர் கூறி இருக்கிறார்கள்.

Trending News