ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஊருக்கு தெரிந்தே பல திருமணங்கள் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்.. ஆமா அதுக்கும் ஒரு தில்லு வேணும்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி தான் வருகின்றனர். ஆனால் சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்க்கையில் பிரபலங்கள் முதல் மனைவியை விவாகரத்து செய்தோ அல்லது அவர்கள் சம்மதத்தோடு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் நடந்துள்ளது. அவர்களில் யார் யார் என்பதையும் யாரை திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்பதை பற்றியும் பார்ப்போம்.

எம்ஜிஆர்: திரைத்துறையில் பல வெற்றிகளை கண்ட எம்ஜிஆர் மூன்று திருமணங்களை செய்து உள்ளார். முதலில் சித்திரைக் குளம் பார்கவி என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர் உடல் நலம் சரியில்லாமல் இறந்ததால் அடுத்ததாக சதானந்தவதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவருக்கும் காசநோயால் பாதிக்கப்பட்டு பின்பு இறந்துள்ளார். அதனால் எம்ஜிஆர் முதல் இரண்டு மனைவிகளும் இறந்ததால் தமிழ் சினிமாவில் நடித்த விஎன் ஜானகி என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ளார். கிட்டத்தட்ட எம்ஜிஆர் 3 திருமணங்கள் செய்த 3 மனைவிகளுடன் வாழ்ந்துள்ளார்.

கமல்ஹாசன்: கமல்ஹாசன் நடிப்பிற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்பகாலத்தில் கமல்ஹாசன் வைத்து பல கிசுகிசுக்கள் வந்துள்ளன. ஆனால் கமல்ஹாசன் வாணி கணபதி என்பவரை 24 வயதில் திருமணம் செய்துள்ளார். பத்து வருடங்களாக இவருடன் இல்லற வாழ்க்கையை மேற்கொண்டு வந்த கமல்ஹாசன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனமொத்து விவாகரத்து செய்து கொண்டுள்ளனர் .

அதன்பிறகுதான் சரிகாவுடன் சிறிது காலங்கள் லிவிங் டுகெதர் உடன் ரிலேஷன்ஷிப் வைத்துள்ளார். பின்பு பல படங்கள் நடித்த கவுதமி உடன் காதல் ஏற்பட்டு லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பெரும் பிரிந்துவிட்டனர்.

நவரச நாயகன் கார்த்திக்: பல படங்களில் நடித்த நவரச நாயகன் ராகினி 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு 1992 ஆம் ஆண்டு ராகினியின் தங்கையையும் திருமணம் செய்து கொண்டுள்ளார். நவரச நாயகன் கார்த்திக் அக்கா மற்றும் தங்கச்சி இருவரையும் திருமணம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

karthik-3
karthik-3

பிரபு: தமிழ் சினிமா ஆரம்பகாலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரபுவிற்கு அப்போதே ஏராளமான கிசுகிசுக்கள் வந்துள்ளன. முதலில் பிரபு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பிறகு தொடர்ந்து குஷ்புவை வைத்து பல கிசுகிசுக்கள் வந்துள்ளன.

சரத்குமார்: ஆரம்ப காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் சரத்குமார். அதன்பிறகு இவர் நடிப்பில் அடுத்து வெளியான படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி அடைந்தன. ஆனால்  1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பிறகு தான் ராதிகாவை 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

sarathkumar-cinemapettai
sarathkumar-cinemapettai

பிரகாஷ்ராஜ்: தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் பிரகாஷ்ராஜ் முதலில் நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு 2010ஆம் ஆண்டு பொன்னி வர்மாவை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Trending News