சினிமா உலகில் பணம் பெயர் புகழ் சம்பாதித்து நன்றாக வாழும் பலரை பார்த்துள்ளோம். ஆனால் அதிலும் சிலர் சொந்த விருப்பு வெறுப்புகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் பல உள்ளது. புகழ் உச்சியில் இருப்பவர்கள் திடீரென சரிந்து கீழே செல்வதன் பிரஷர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து உள்ளனர்.
சில்க் ஸ்மிதா, தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக காலம் கடந்து போற்றப்படுபவர். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே தன்னுடைய சொந்த பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
மோனல், இவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை என நடிகை சிம்ரன் கம்ப்ளைன்ட் செய்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சினிமாவில் ஏற்பட்ட காதல் தோல்வியால் இவர் தற்கொலை செய்து கொண்டார்.
குணால், காதல் தேசம் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். இவர் வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கான காரணம் இன்றுவரை தெரிவிக்கப்படவில்லை.
பிரதியூஷா, சத்யராஜின் சவுண்ட் பார்ட்டி எனும் படத்தில் நடித்து இருப்பார். பெரிய நடிகையாக வர வேண்டிய இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் ஜெயலட்சுமி, திவ்யா, பாரதி, மயூரி, உதய்கிரண், விஜி, கல்பனா போன்றோரும் தமிழ் சினிமா வட்டாரங்களில் தற்கொலை செய்துகொண்ட நடிகர்கள் ஆவர்.