வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்ட 6 நடிகர்கள்.. சாக்லேட் முகத்தால் பரிதவிக்கும் ஜீவா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய்,கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு இருக்கும் பெண் ரசிகர்களை விட சாக்லேட் பாய்ஸ் என பெயர் எடுத்துள்ள சில நடிகர்களுக்கு இருக்கும் பெண் ரசிகைகள் ஏராளம். இருந்தாலும் பல தயாரிப்பாளர்கள் இவர்கள் பாக்காமே செல்லாமல் வாய்ப்புகளை வழங்குவதில்லை.

காரணம், இவர்களை வைத்து ஆக்ஷன் திரைப்படங்களை எடுத்தால் ரசிகர்கள் பார்ப்பதில்லை, சரி காதல் திரைப்படங்களை எடுத்தால் படத்தில் போட்ட பட்ஜெட் கூட வசூலாவதில்லை. இதன் காரணமாகவே நம் தமிழ் சினிமாவில் சரியான பட வாய்ப்புகள் அமையாமல் உள்ள 6 சாக்லேட் பாய்ஸ் ஹீரோக்களை தற்போது பார்க்கலாம்.

Also read: ஜீவா வளர்ச்சியை கெடுத்த 5 படங்கள்.. அதல பாதாளத்திற்குச் சென்ற மார்க்கெட்

சித்தார்த்: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான சித்தார்த், ஆயுத எழுத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியவர். சித்தார்த்தின் நடிப்பை விட இவரின் ஸ்மார்ட்டான லுக்கிற்கும், பேச்சுக்கும் பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளனர். 40 வயதை கடந்த சித்தார்த், சில ஆக்ஷன் படங்களில் நடித்தபோதிலும் தோல்வியுற்ற நிலையில் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் தயாரிக்க சற்று யோசிக்கிறார்களாம்.

ஜீவா: ஆசை ஆசையாய், தித்திக்குதே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ஜீவா பெண் ரசிகைகளின் கனவு கண்ணனாக வலம் வந்தவர். சமீபத்தில் 83 திரைப்படத்தில் நடித்திருந்த ஜீவாவுக்கு, அண்மைக்காலமாக திரைப்படங்கள் எதுவும் வராததால், தன் தந்தை போலவே, ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இதனிடையே இவரது முகத்திற்கு ஆக்ஷன் ஹீரோ ரோல் செட்டாகாத நிலையில் தயாரிப்பாளர்கள் இவரது பக்கமே போகாமல் உள்ளனர்.

Also read: விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த ஜீவா.. இவ்வளவு பெரிய சான்ஸ் மிஸ் ஆயிடுச்சு

ஹரிஷ் கல்யாண்: மலையாளத்தில் வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ஹரிஷ் கல்யாண், தமிழில் பொறியாளன் உள்ளிட்ட திரைப்படத்தின் நடித்திருந்தார். பின்னர் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாணுக்கு, அந்நிகழ்ச்சியில் மூலமாக பெண் ரசிகைகளை அதிகம் கவர்ந்தார். தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்தார். இவரது திரைப்படங்கள் பெருமளவில் வசூல் இல்லாததால் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் பண்ணவே சற்று பயப்படுகிறார்கள்.

ஜெய்: நடிகர் ஜெய், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 600028 திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அதன்பின் வாமனன், கோவா உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகைகளை தன் வசம் ஈர்த்தவர். அதன்பின் ஜெய் நடித்த பல திரைப்படங்கள் தோல்வியுற்ற நிலையில், தயாரிப்பாளர்கள் இவரது பக்கமே செல்ல கூடாது என முடிவெடுத்துள்ளனர். இருந்தாலும் தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: படத்தில் கல்லா கட்ட முடியாமல் ரூட்டை மாற்றிய ஜீவா.. இதுலயாவது நல்ல நேரம் வரட்டும்

விமல்: தனது மதுரை மண்வாசனையை தனது பேச்சிலும், நடிப்பிலும் வெளிப்படுத்தி வரும் நடிகர் விமலின் திரைப்படங்களில் அதிகமாக காமெடி காட்சிகளை பார்க்க முடியும். இவரை வைத்து ஆக்சன் திரைப்படங்கள் எப்படி எடுப்பது என தயாரிப்பாளர்கள் யோசிக்கும் அளவிற்கு இவரது நடிப்பு இருக்கும். இதன் காரணமாகவே இவரது பக்கம் தயாரிப்பாளர்கள் பெருமளவில் செல்லாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரத்: பாய்ஸ் படத்தின் மூலமாக அறிமுகமான பரத், சாந்தமான சாக்லேட் பாய் என பெயரெடுத்தவர். சில ஆக்ஷன் திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் இவரது சாந்தமான முகத்திற்கு ஆக்ஷன் திரைப்படங்கள் செட்டாகாமல் பல திரைப்படங்கள் தோல்வியுற்றது. இந்த நிலையில் பரத்தின் திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு வசூலை ஈட்ட முடியவில்லை என்பதால் இவரது பக்கம் எந்த தயாரிப்பளர்களும் செல்லம்மாள் உள்ளனர்.

Trending News