ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

திரை பிரபலங்களும் அவர்களின் இப்படி ஒரு உறவு முறையும்..

சிவாஜி – பிரபு, பிரபு – விக்ரம் பிரபு, சத்யராஜ் – சிபி ராஜ், கார்த்தி – கெளதம் கார்த்தி என பல அப்பா மகன் மற்றும் நடிகைகளின் மகள்கள் உறவு முறையில் திரைத்துறையில் பணியாற்றி வரும் நபர்களை தான் நாம் பார்த்திருப்போம். அறிந்திருப்போம்.

ஆனால், பெற்றோர் – பிள்ளை உறவு இல்லாமல் வேறு சில உறவு முறை கொண்டுள்ள தமிழ் திரை பிரபலங்களும் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களை பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்…

ஏ.ஆர். ரஹ்மான் – ஜி.வி. பிரகாஷ்

ஏ. ஆர். ரஹ்மானின் மூத்த அக்கா ரெய்ஹனா மற்றும் ஜி. வெங்கடேஷ் எனும் பின்னணி பாடகரின் மகன் தான் ஜி.வி.பிரகாஷ். இந்த வகையில் பார்த்தல் ஜி.வி பிரகாஷ் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உடன் பிறந்தாரின் மகன் ஆகிறார்.

பிரகதி – அபினவ் முகந்

pragathi
pragathi

பாடகி பிரகதி மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் இவர்கள் இருவரும் அத்தை, மாமா; பெரியப்பா, பெரியம்மா மகன், மகள் உறவுமுறை கொண்டவர்கள்.

ரஹ்மான் – ரகுமான்

rahman

சங்கமம் புகழ் நடிகர் ரகுமானுக்கு இசை புயல் ரஹ்மான் மைத்துனன் / கொழுந்தன் ஆவார்.

பிரியாமணி – வித்யா பாலன்

priyamani
priyamani

பிரியாமணி – வித்யா பாலன் உறவும் இரண்டாவது சந்ததி மாமன் மகள் / அத்தை மகள் உறவு முறை கொண்டவர்கள். இருவரின் அப்பாக்களும் மாமா பையன், அத்தை பையன் உறவு முறை.

கமல் – மணிரத்னம்

kamal
kamal

கமலின் சகோதரனின் மகளான சுஹாசினியை தான் மணிரத்னம் திருமணம் செய்துள்ளார்.

சோ – ரம்யா கிருஷ்ணன்

ramya
ramya

மறைந்த எழுத்தாளர், நடிகர் சோவிற்கு மருமகள் முறை ஆகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

ஸ்ரீசாந்த் – பாடகர் மது பாலகிருஷ்ணன்

srisanth
srisanth

மலையாள பாடகர் மது பாலகிருஷ்ணன்-க்கு ஸ்ரீசாந்த் மைத்துனன் / கொழுந்தன் முறை ஆகிறார்.

சத்யராஜ் – சத்யன்

sathyaraj
sathyaraj

சத்யராஜ்-க்கு மருமகன் முறை உறவுக்காரர் சத்யன்.

ஞானவேல் ராஜா – நடிகர் சிவ குமார்

sivakumar
sivakumar

நடிகர் சிவகுமாருக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மருமகன் உறவு முறை ஆகிறார்.

ஒய். ஜி. மகேந்திரன் – ரஜினிகாந்த்

rajini
rajini

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரன் சகலை உறவு முறை ஆகிறார்.

ஜெய்-தேவா

jai
jai

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பகவதி இப்படத்தின் மூலம்தான் ஜெய் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பலருக்கும் எப்படி முதல்படமே விஜயுடன் கிடைத்தது என சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் ஜெய் இசையமைப்பாளரான தேவாவின் அம்மாவோட அண்ணன் பையன். ஆனால் இதுவரைக்கும் ஜெய் தேவாவின் உறவினர் என்பது பலருக்கும் தெரியாது.

எஸ்என் சுரேந்தர்-விஜய்

sn surendar
sn surendar

எஸ்என் சுரேந்தர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு பிளேபேக் சிங்கர். ஆனால் இவர் விஜயின் அம்மாவான ஷோபனாவின் அண்ணன் ஆவார். அதாவது விஜய்க்கு தாய் மாமன் ஆவார். ஆனால் இது பல ரசிகர்களுக்கும் தெரியாத ஒன்று தான். இவருடைய மகன் சென்னை 600028 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார்.

பிரசாந்த்-விக்ரம்

vikram
vikram

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் பல படங்கள் பணியாற்றியுள்ளார் ஆனால் இவரது தந்தையும் வினோத் ராஜ் ஒரு நடிகர் என்பது பலருக்கும் தெரியாது. அதுமட்டுமில்லாமல் நடிகர் விக்ரமிற்கு தியாகராஜன் தாய்மாமா என்பது பல ரசிகர்களுக்கும் தெரியாத ஒன்று.

Trending News