வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அதிக வயது வித்தியாசம் உள்ள பிரபல சினிமா ஜோடிகள்.. அதுவும் இரண்டாவது உள்ள ஜோடி ரொம்ப மோசம்!

கோலிவுட்டில் படப்பிடிப்பின்போது ஜோடியாக நடித்த பின் வாழ்க்கையிலும் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர்.  இந்த வகையில் அதிக வயது வித்தியாசம் உள்ள சினிமா ஜோடிகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

பிரகாஷ் ராஜ் – போனி வர்மா: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பன்மொழிப்படங்களில் ஒரு மாஸ் வில்லனாக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். ஆசை படத்தின் மேஜரும் போக்கிரி படத்தின் அலிபாயும் சிங்கம் முதல் பாகத்தின் மயில்வாகனுமும் என மறக்க முடியாத வில்லன். இவர் இரண்டாம் திருமணம் செய்த போது இவருக்கு வயது 45 இவரின் மனைவி போனி வர்மாவுக்கு 33, கிட்டத்தட்ட 12 வயது வித்தியாசம் உள்ளது.

prakash-raj-cinemapettai
prakash-raj-cinemapettai

ஆர்யா- சாயிஷா: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும நடிகர் ஆர்யா நடிகர் தயாரிப்பளர் என இருவேறு பக்கங்களிலும் கலக்கி வருகிறார். 2019ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார் அப்போதே இருவருக்குமான வயது ஒப்பீடு வலைதளங்களை ஆக்ரமித்து இருந்தது. 21வயது நிரம்பிய சாயிஷா 38 வயது நிரம்பிய ஆர்யாவுடன் திருமணம் செய்தார். என்னவெல்லாம் கமாண்டுகளில் கலாய்க்கப்பட்டாலும் தம்பதி மிகவும் கலகலப்பாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 17 வருடம் வித்தியாசம் உள்ளது.

arya-sayeesha-cinemapettai
arya-sayeesha-cinemapettai

விஷால் – அனிஷா: தமிழ் திரையுலகின் மாஸ் நடிகராக ஆக்சன் படங்களை தேர்ந்து நடித்து வருபவர் நடிகர் விஷால். செல்லமே படத்தில் துவங்கி இப்போதுவரை ஆக்சனில் அடித்து கலக்குகிறார் நடிகர் விஷால். 2019ல் அனிஷா ரெட்டிை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட விஷாலுக்கு நிச்சயதார்த்தின் போது வயது 41ஆம் அனிஷாவுக்கு 27வயது.

vishal-anisha-cinemapettai
vishal-anisha-cinemapettai

ஜெனிலியா- ரித்தேஷை : சச்சின் படத்தில் இளைஞர்களின் நெஞ்சில் சிக்சர்களாக சிதற விட்டவர் நடகை ஜெனிலியா பாய்ஸ் படத்திலேயே கவர்ச்சியில் குதித்த ஜெனிலியா வாய்ப்பு வளமாக இருந்த நேரத்திலேயே ஒதுங்கி விட்டார். தனது 25ஆம் வயதில் நடிகர் ரித்தேஷை மணம் முடித்த ஜெனிலியா இருவருக்குமான வயது வித்யாசம் 9 ஆண்டுகளாம். 2012ல் திருமணம் செய்த தமபதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறது.

genelia
genelia

அசின்- ஷர்மா: தமிழில் கஜினி எம்.குமரன் மஜா போக்கிரி படங்களில் நடித்து அப்போதைய டிரண்டிங்கில் வலம் வந்தவரன நடிகை அசின். பாலிவுட் கஜினி ரீமேக்கிற்காக போனவர் தமிழன் பாடிகார்ட் ரீமேக்கிற்கு தான் திரும்பி வந்தார். 2015-ல் தொழிலதிபர் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார் அசின். திருமணத்தின் போது அசனுக்கு வயது 30 ஷர்மாவின் வயது 40 பத்தாண்டுகள் வித்யாசத்திலும் பக்குவமாய் வாழ்கிறது தம்பதி.

asin
asin

தல- ஷாலினி: தமிழ் சினிமாவின் அசைக்க முடியா உயரத்தில் இருப்பவர் தல அஜித். அமராவதி முதல் விஸ்வாசம் வரை என மிக நீண்டது அவரின் திரைப்பயணம். சாலினியும் சும்மாவல்ல பேபி சாலினியாக துவங்கி அலைபாயுதே வரை என நீண்டது தான். இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தனர் மாஸ் வெற்றியை தந்த இப்படம் இவர்களுக்குள் காதலையும் தந்தது. இருவரும் திருமணமும் செய்து கொண்டனர் இவர்கள் இருவருக்குமான வயது வித்யாசம் 8 வருடங்களாகும்.

ajith-shalini
ajith-shalini

Trending News