வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நடிகை அஞ்சலிக்கு கல்யாணம்? ஆனா மாப்பிள்ளை ஜெய் இல்லையாம்.. இவர்களில் ஒருவர்தானாம்

ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அதன்பின் அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

அஞ்சலி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் படம் வெளிவந்தது. மேலும் தமிழில் பூச்சாண்டி, தெலுங்கில் இரண்டு படங்கள் மற்றும் கன்னடத்தில் ஒரு படம் என சில படங்களில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே நடிகை அஞ்சலிக்கு 34 வயது. மேலும் நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்யப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டதாகவும் கூறினார்கள்.

இதனை அஞ்சலி அளித்த ஒரு பேட்டியில் ‘நான் காதலித்தது உண்மைதான். ஆனால் அந்த காதல் நிறைவேறவில்லை. தோல்வியில் முடிந்து விட்டது என்று கூறி முடித்தார். ஆனால் காதலித்தவர் பெயரை வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் சீக்கிரத்தில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மாப்பிள்ளை பற்றி இரண்டு விதமான செய்திகள் வருகிறது. ஒன்று தெலுங்கு நடிகராக இருக்கலாம் அல்லது வீட்டில் பார்க்கும் தொழிலதிபர்தான் மாப்பிள்ளையாக இருக்கலாமாம்.

jai-anjali-cinemapettai
jai-anjali-cinemapettai

அதுமட்டுமல்லாமல் திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை நடிகை அஞ்சலி உறுதிப்படுத்தவில்லை.

Trending News