வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய 6 நடிகைகளின் படங்கள்!

தமிழ் சினிமாவில் அந்த காலம் முதலே கவர்ச்சி என்பது எல்லைதாண்டா வரையறையில்தான் உள்ளது. ஆனால் கவர்ச்சி என்பது எந்த காலக்கட்டத்திலும் தவிர்க்கப்படவோ, குறைக்கப்படவோ இல்லை. சாவித்திரி காலம் முதல் சன்னி லியோன் காலம் வரை கவர்ச்சி என்பது இருந்து கொண்டுதான் வருகிறது.

அன்று முதல் இன்றுவரை நம் தமிழ் ஹீரோயின்கள் அதிகமாக கவர்ச்சி காட்டிய படங்கள் பற்றி ஒரு சிறிய பார்வை

லட்சுமி:

actress lakshmi
actress lakshmi

பெயருக்கேற்றாற்போல் லட்சுமிகரமான தோற்றம் கொண்ட பழம்பெரும் நடிகை, அழுத்தமான பல கதாபாத்திரங்களை ஏற்று நல்ல நடிகை என்று பெயர் பெற்றவர். ஆரம்ப காலகட்டத்தில் இவர் சில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தார். அவற்றுள் மிகவும் அதிக கவர்ச்சி காட்டிய படம் சிவகுமாருடன் இவர் நடித்த ‘திருமகள்’ என்ற படம்தான்.

சாவித்திரி:

mahanati-savitri

குழந்தை முகத்துடன் எந்த கதாபாத்திரத்தையும் எளிதாக ஏற்று நடிப்பில் நடிகையர் திலகம் என்னும் பட்டம் பெருமளவிற்கு கைதேர்ந்த நடிகை. இவர் கவர்ச்சியாக நடித்தார் என்பதே ஆச்சர்யமான விசயம்தான். ஆனால் அதுதான் உண்மை. அந்த படத்தின் பெயர் சுழி. மலையாளப் படமான இந்த படத்தில் இவர் குடிபோதைக்கு அடிமையாகி இருப்பார். நிஜ வாழ்விலும் பண நஷ்டம் காரணமாக குடிக்கு அடிமையாகி தான் சம்பாதித்த புகழையும் பெயரையும் இறுதிக்கட்டத்தில் தொலைத்தவர்.

குஷ்பூ:

actress kushbu hot still
actress kushbu hot still

குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி பின் ரசிகர்களால் கோவில் கட்டுமளவிற்கு பிரபலமடைந்தவர் குஷ்பூ. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் அதிக படங்களில் ஹீரோயினாக மட்டுமே நடித்தவர் என்ற புகழுக்குரியவர். இவர் கவர்ச்சியாய் நடித்தார் என்பதை விட அதீத படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார் என்பதற்கு சான்றாய் உள்ள படம்தான் வீரம் விளைஞ்ச மண்ணு. அந்த படத்தில் ராஜ்கிரணுடன் இவருக்குண்டான முதலிரவு காட்சிகள் அதீத கவர்ச்சியாய் இருக்கும்.

மாதவி:

actress madhavi

கண்ணழகி மாதவி மிஸ். மெட்ராஸ் பட்டம் வென்றவர். கமல், ரஜினி போன்ற பெரும் நட்சத்திரங்களுடன் தொடர்ச்சியாக நடித்தவர். இவர் நடித்த இதி நா தீர்ப்பு என்னும் தெலுங்கு திரைப்படம் இவரது அதிகபட்ச கவர்ச்சியை ரசிகர்களுக்கு காட்டிய படம்.

பானுப்பிரியா:

bhanupriya

பானுப்ரியா தமிழிலும், மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்ததைவிட தனது தாய் மொழியான தெலுங்கில்தான் அதிக படங்கள் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த ராஜசில்பி அதிக கவர்ச்சிக்காக பேசப்பட்டாலும் அவர் மலையாளத்தில் நடித்த ரிஷ்யஸ்ரின்கன் படமே ஒரு ஆபாசத் திரைப்பட நாயகியாக பானுப்பிரியாவை இன்றுவரை சித்தரித்து வருகிறது.

நமீதா:

Actress Namitha
Actress Namitha

நமீதா என்றாலே கவர்ச்சிதான், அதில் என்ன அதீத கவர்ச்சி என்ற கேள்வி அனைவருக்கும் வந்திருக்கும். இருப்பினும் இதுவரை வந்த படங்களிலேயே நமீதா அதிக கவர்ச்சி காட்டிய படம் என்றால் அது ஸ்ரீகாந்த்துடன் இவர் நடித்த இந்திர விழா படம்தான்.

Trending News