செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

வாரிசு நடிகை கையிலெடுத்த கடைசி கவர்ச்சி அஸ்திரம்.. பட வாய்ப்பு இல்லாததால் திடீர் முடிவு

சமீபகாலமாகவே சினிமாவில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சினிமாவில் களமிறங்கியவர் தான் அந்த வாரிசு நடிகை. ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்த அந்த வாரிசு நடிகை முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

அதன் பின்னர் டாப் நடிகைகளான நயன்தாரா மற்றும் சமந்தாவை போல தானும் நடிக்க ஆசைப்பட்டு திடீரென கமர்ஷியல் படங்களில் இருந்து தனது ரூட்டை மாற்றி இனிமேல் நடித்தால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறி வந்தார்.

அதேபோல் சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. எல்லாரும் நயன்தாரா ஆகிவிட முடியுமா? மேலும் இதனை தொடர்ந்து நடிகைக்கு பட வாய்ப்புகளும் குறைந்து வந்தன. ஒழுங்காக கமர்ஷியல் படங்களில் நடித்திருந்தாலாவது பட வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.

தற்போது சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாததால் நடிகைகளிடம் இருக்கும் கடைசி ஆயுதத்தை வாரிசு நடிகை கையில் எடுத்துள்ளாராம். அதாங்க கவர்ச்சி, பொதுவா பட வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் வாய்ப்புகளை கைப்பற்ற நடிகைகள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் கவர்ச்சி தான்.

அந்த வகையில் தற்போது வாரிசு நடிகையும் தாராளமாக கவர்ச்சி காட்ட தயாராகி விட்டாராம். எப்படியேனும் பட வாய்ப்புகளை பிடித்தே தீர வேண்டும் என நடிகை எடுத்துள்ள இந்த திடீர் கவர்ச்சி அவதாராத்தால் சக நடிகைகள் கலக்கத்தில் உள்ளார்களாம். நடிகையின் இந்த முயற்சி கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Trending News