வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஹீரோயின்களுக்கு அந்த மாதிரி டார்ச்சர் கொடுத்த 5 ஹீரோக்கள். காலம் மட்டுமே பதில் சொல்லும் அதிசயம்

Tamil actress facing bad behaviors on male celebrities: பெண் ஆனவள் மனதளவில் ஆண்களைவிட பலமாக இருந்திருந்தாலும் தனக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்க்கும் பலமற்றவளாக இருப்பதே அவளின் பலவீனம். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் தரம் அற்றவர்கள். இப்படியான ஆண் வர்க்கத்தினருடன் பயணப்படும் படியே இந்த உலகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நடிகைகளும் விதிவிலக்கு அல்ல.

பிக்பாஸ் விசித்ரா: முத்து, வில்லாதி வில்லன், பெரிய குடும்பம் போன்ற படங்களில் கிளாமர் ஆர்டிஸ்ட் ஆக நடித்த விசித்ரா தற்போது பிக்பாஸில் ஒரு கண்டஸ்டன்ட்டாக இருந்து வருகிறார். ஆரம்ப காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். அசாதாரண விஷயங்களை சாதாரணமாக செய்யும் தெலுங்கு நடிகர் பாலையா அவர்கள் படப்பிடிப்பின் போது விசித்ராவிற்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதை வெளிச்சத்துக்கு கொண்டு வர  இவருக்கு இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ ரெட்டி: “கோலிவுட்டின் ரகசிய கருப்பு பக்கத்தை வெளியே கொண்டு வர நினைக்கிறேன்” என பல முக்கிய புள்ளிகள் சான்ஸ் தரேன் என்று ஏஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ் மற்றும் விஷால் என ஒருவர் பின் ஒருவராக அவரை யூஸ் பண்ணிய கதையை லீக் செய்தார் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி.

ரேகா: புன்னகை மன்னன்படத்திற்கு முத்த காட்சி தேவைப்பட்டபோதும் நாயகி அனுமதி பெறாமலேயே டைரக்டர் மற்றும் நடிகர் கமல் கலந்துரையாடி அக்காட்சியை படமாக்கினர். விளைவுகளை சந்தித்தது என்னவோ நாயகி மட்டும்தான். இதனால் அவர் பலருக்கும் விளக்கம் அளிக்க வேண்டி இருந்தது. அந்த சமயத்தில் நாயகி பெரிதாக கண்டு கொள்ளாததால் 30 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் திடீரென வைரலானது குறிப்பிடத்தக்கது.

Also read: விசித்ரா லிஸ்டில் இன்னொரு நடிகையா.? பாலகிருஷ்ணாவை நாரடித்த பிரபலம்

சோனா: குசேலன் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த சோனா அவர்கள் வெங்கட் பிரபுவின் மங்காத்தா படத்திற்கு பின் நடைபெற்ற வெற்றி பார்ட்டியில் கலந்து கொண்டார் சோனா . எஸ்பிபி  சரண் அவரிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி வழக்கு பதிவு செய்தார். பின் ஓரிரு நாட்களில் வழக்கை வாபஸ் வாங்கும் செய்துவிட்டார். பின் வெங்கட் பிரபு படம் இயக்குவதாக கூறி அவரிடமிருந்து வாங்கிய தொகையை கொடுக்கும்படி சங்கத்திடம் புகார் கூறினார் இது அந்த சமயங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

பாவனா: மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்த பாவனாவை பழிவாங்கும் பொருட்டு திலீப் குமாரின் பேரில் ரவுடிகள் பாவனாவை காரில் கடத்தி தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் அதனை படம் பிடித்த நிகழ்வு சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குப் பின்  திலிக்குமார் எல்லாவிதமான சோதனைகளுக்கும் தயார் என்று அறிக்கை விட்டது, கம்பி எண்ணியது  எல்லாம் வேறு கதை.

ஒட்டுமொத்த பெண்கள் எல்லோரும் நல்லவர்களும் அல்ல ஒட்டுமொத்த ஆண்கள் எல்லோரும் கெட்டவர்களும் அல்ல. சில பெண்கள் தனக்கு நடக்கும் கொடுமைகளை  வெளியே சொன்னால் பெயர் கெட்டு விடுமோ என்று பயப்படுகிறார்கள் சிலரோ பெயர் தெரிய வேண்டும் என்பதற்காகவே தனக்கு நடந்ததை பறைசாற்றுகிறார்கள். இது போன்ற சம்பவங்களில் இருக்கும் உண்மைக்கு காலம் மட்டுமே பதில் சொல்லும்.

Also read: கணவரின் டார்ச்சரால் சினிமாவை விட்டெறிந்த 5 நடிகைகள்.. அட்ரஸே இல்லாத மெகா ஹிட் அஜித் ஹீரோயின்

Trending News