தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக ஆதிக்கம் செலுத்தி வருபவர் தான் அந்த நடிகை. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அந்த நடிகை தற்போது வரை பல படங்களில் நடித்து வருகிறார். வயதானாலும் மார்க்கெட் குறையாமல் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
ஆனால் அந்த நடிகையோ படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் வயது அதிகரித்து கொண்டே செல்வதை மறந்து விட்டார் போல. தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தட்டி கழித்து கொண்டே செல்கிறார். மேலும் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்றும் கூறி வருகிறாராம்.
இருப்பினும் அந்த வயது அதிகமாகி வருவதால் அந்த நடிகையை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகையின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் வட்டாரமும் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்களாம். ஆனால் நடிகை பிடிவாதமாக மறுத்து வருகிறாராம்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே அந்த நடிகை நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் வெளியாகாமல் உள்ளதோடு, மேலும் சில புதிய படங்களிலும் நடிகை ஒப்பந்தமாகி உள்ளார். எனவே வெளியாகாமல் இருக்கும் படங்கள் வெளியான பிறகும், ஒப்பந்தமான புதிய படங்களில் நடித்து முடித்த பின்னரும் தான் திருமணம் குறித்து யோசிப்பேன் என திட்டவட்டமாக கூறி விட்டாராம்.
பொதுவாக நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் செய்து கொண்டு கணவருடன் செட்டிலாகி விடுவார்கள். பின்னர் விருப்பம் இருந்தால் திருமணத்திற்கு பிறகு ரீ என்ட்ரி கொடுப்பார்கள். சில நடிகைகள் அதுவும் கிடையாது. ஆனால் இவரோ வயதானாலும் பரவாயில்லை படங்களில் தான் நடிப்பேன் என அடம்பிடித்து வருகிறார்.