தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிசியாக வலம் வருபவர் தான் அந்த இளம் வாரிசு நடிகை. சமீபத்தில் ஒரு முன்னணி நடிகருடன் இவர் இணைந்து நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது வரை இந்த படம் வசூலை குவித்து வருவதால் நடிகை மகிழ்ச்சியில் உள்ளார்.
மேலும் இந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிகை அவரது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விட்டார். அதுமட்டும் இன்றி நடிகைக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். ஏற்கனவே நடிகை நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், நடிகை மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
இந்நிலையில் தனது சம்பளத்தை உயர்த்தியதை அடுத்து நடிகை இத்தனை ஆண்டுகள் தான் சம்பாதித்த பணத்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால் இதை கேள்விப்பட்ட சக நடிகைகள் அவசரப்பட்டு தயாரிப்பில் இறங்க வேண்டாம். தேவை இல்லாமல் சம்பாதித்த மொத்த பணத்தையும் வீணாக்கி விடாதே என அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.
நடிகைகள் மற்றும் நடிகர்கள் படங்களில் நடிப்பதோடு படங்களை தயாரிப்பதையும் செய்து வருகிறார்கள். ஆனால் பட தயாரிப்பு என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. இதில் மிகவும் ரிஸ்க் உள்ளது. படம் வெற்றி பெறவில்லை என்றால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி போன்றவர்களே படங்களை தயாரித்து நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், இவரோ இளம் நடிகை தற்போது தான் அவரது கேரியரே தொடங்கி அடுத்தடுத்து மேலே சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இதுபோன்ற தேவையில்லாத ரிஸ்க் இப்ப தேவை தானா என நட்பு வட்டாரங்கள் நடிகைக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள். நெருங்கிய நண்பர்கள் கடுமையாக எச்சரித்த பின்னும் அவர் கேட்பதுபோல் இல்லையாம். எது எப்படியோ எல்லாம் பட்டால்தான் திருந்தும் என்பதுதான் உண்மை.