வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

47 வயது நடிகருக்கு ரூட் போடும் இளம் நடிகை.. இப்பல்லாம் டெய்லியும் போன் பண்றாராம்!

இப்போதெல்லாம் மார்க்கெட் இல்லாமல் தவிக்கும் நடிகைகள் தாங்களாகவே வலிய வந்து நடிகர்களிடம் சிரித்து வழிந்து பேசும் நிலைமை உண்டாகிவிட்டது. நடிகர்களும் அடுத்தடுத்த காலகட்டங்களில் வரும் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து சென்றுவிடுகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அவருடன் ஏற்கனவே இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் அந்த நடிகை. அவரது நேரமோ என்னமோ அந்த 2 படமும் அந்த நடிகருக்கு சுமாராகத்தான் அமைந்தது.

வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடினாலும் படம் பெரிய அளவு ரசிகர்களை கவர வில்லை என்பதே உண்மை. இவ்வளவு நாட்களாக நம்ம ஊரில் நடித்துக் கொண்டிருந்த அந்த நடிகர் முதல் முறையாக அக்கட தேசத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

மேலும் அக்கட தேசத்தில் அந்த நடிகை ஏற்கனவே பிரபல நடிகையாக இருப்பதால் இந்த நடிகரின் படத்தில் நடித்தால் கண்டிப்பாக மேலும் சில வருடங்களுக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு தானாக வந்து அமையும் என கணக்குப் போட்டு காய் நகர்த்த வருகிறாராம்.

அந்த வகையில் என்றும் இல்லாத திருநாளாக இப்போதெல்லாம் தினமும் அந்த நடிகருக்கு போன் செய்து உடல்நலம் பற்றி விசாரித்து வருகிறாராம். நடிகையின் சூதுவாதை அறிந்த நடிகர் இப்போதெல்லாம் போன் எடுப்பதே இல்லை என்கிறார்கள் அந்த நடிகரின் வட்டாரங்கள். முன்னாடி மாதிரி கொழுக் மொழுக் என்று இருந்தாலும் பரவாயில்லை அந்த நடிகருடன் ஜோடி சேர்த்து பார்த்தால் நன்றாக இருக்கும்.

ஆனால் இப்போது அந்த நடிகை உடல் எடையை முற்றிலும் குறைத்து பார்ப்பதற்கே பரிதாபமான தோற்றத்தில் உள்ளார். இப்போ அந்த நடிகருக்கு ஜோடியாக நடித்தாலும் பார்ப்பதற்கு அந்த நடிகரின் தங்கை போலவே காட்சி அளிப்பார் என்பதால் பெரும்பாலும் புதுமுக நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் அந்த நடிகர்.

Trending News