சினிமா என்று வந்துவிட்டாலே அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்தால் தான் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். அப்படி வித்தியாசமாக விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற நாயகிகள் லிஸ்ட் இங்கே பார்ப்போம்.
நடிகை ஸ்ரீப்ரியா:
கார்த்திக் நடிப்பில் உருவாகிய நட்பு எனும் படத்தில் ராதா என்ற பெயரில் விலைமாதுவாக நடித்தார். இந்த படத்தில் ஸ்ரீபிரியாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

நடிகை சரண்யா:
இன்று அம்மாவாக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் சரண்யா தனது ஆரம்ப காலகட்டங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதிலும் கமலஹாசனுடன் நாயகன் படத்தில் ஜோடி போட்ட சரண்யாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் நிலா என்ற கதாப்பாத்திரத்தில் விலைமாதுவாக நடித்து இருப்பார்.

நடிகை சங்கீதா:
2000ன் ஆரம்ப காலகட்டங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் தனம் எனும் படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார். ஆனால் பெரிய அளவு பெயர் கிடைக்கவில்லை.

நடிகை சினேகா:
இன்றும் கேங்க்ஸ்டர் படம் என்றால் எடுத்துக்காட்டாக இருப்பது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான புதுப்பேட்டை படம் தான். இந்த படத்தில் சினேகா கிருஷ்ணவேணி என்ற கதாபாத்திரத்தில் விலைமாதுவாக நடித்திருப்பார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

நடிகை ரம்யா கிருஷ்ணன்:
கவர்ச்சி நாயகியாக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகையாகவும் நாயகியாகவும் பல படங்களில் இந்தியா முழுவதும் கலக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன். கமல்ஹாசன் நடிப்பில் உருவான பஞ்சதந்திரம் படத்தில் அலைஸ் மேகி என்ற பெயரில் மற்றும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விலைமாதுவாக நடித்திருப்பார்.

நடிகை அனுஷ்கா ஷெட்டி:
சிம்பு, பரத் நடிப்பில் உருவான வானம் படத்தில் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் விலைமாதுவாக நடித்து மொத்த இளைஞர் கூட்டத்தையும் கிறங்கடித்தார். இந்த படம் அனுஷ்காவுக்கு அவரே எதிர்பார்க்காத அளவுக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது.
