புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இரட்டை வேடத்தில் நடித்த 7 நடிகைகள்.. அதுலயும் இவங்க நடிப்பு வேற லெவல்

ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடிப்பது ஆச்சரியமில்லை, ஆனால் ஹீரோயின்கள் இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி கண்ட படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். இந்த ஏழு ஹீரோயின்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து பின் காணாமல் போய்விட்டார்கள். திருமணத்திற்குப் பின் ஜோதிகா மட்டும் கணவன் தயாரிப்பில் நடித்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.

சினேகா: கரு பழனியப்பன் தயாரிப்பில் 2003ல் வெளிவந்த திரைப்படம் பார்த்திபன் கனவு. இப்படத்தில் ஸ்ரீகாந்த், சினேகா, மணிவண்ணன், விவேக், தேவதர்ஷினி என பலர் நடித்திருந்தார்கள். சினேகா இப்படத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் நவீனகரமான பெண்ணாகவும், சத்யா கதாபாத்திரத்தில் குடும்ப பெண்ணாகவும் நடித்திருந்தார். இப்படம் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

sneha
sneha

சிம்ரன்: 1999 இல் கௌதமன் இயக்கிய திரைப்படம் கனவே கலையாதே. இப்படத்தில் முரளி, சிம்ரன், டெல்லி கணேஷ், கோவை சரளா, சின்னிஜெயந்த், சார்லி, தாமு, என பலர் நடித்து இருந்தார்கள். இப்படத்தில் சிம்ரன் அமிர்தா மற்றும் சாரதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

simran
simran

ஜோதிகா: சசி சங்கரின் இயக்கத்தில் 2004 இல் வெளியான திரைப்படம் பேரழகன். இப்படத்தில் சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் சூர்யா, ஜோதிகா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார்கள். ஜோதிகா இப்படத்தில் செண்பகம் மற்றும் பிரியா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

jyothika
jyothika

அனுஷ்கா: கோடி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் 2009இல் வெளியான திரைப்படம் அருந்ததி. இப்படத்தில் அனுஷ்கா செட்டி, சோனு சூட், சாயாஜி சிண்டே, மனோரமா ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் அனுஷ்கா, அருந்ததீ கதாபாத்திரத்திலும், அருந்ததியின் கொள்ளுப் பாட்டியான ஜக்கம்மா கதாபாத்திரத்திலும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

anushka-cinemapettai
anushka-cinemapettai

சமந்தா: விஜய்மில்டன் இயக்கத்தில், இமான் இசையில் 2015 இல் வெளியான திரைப்படம் பத்து என்றதுக்குள்ள. இதில் விக்ரம், சமந்தா, பசுபதி, மனோபாலா பலர் நடித்திருந்தார்கள். சமந்தா இப்படத்தில் ஷகிலா, கேட்ஜிமோய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமந்தா இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

samantha-cinemapettai
samantha-cinemapettai

பிரியாமணி: பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சாருலதா படத்தில் நடித்திருந்தார். பிரியாமணி இப்படத்தில் சாரு கதாபாத்திரத்தில் மிகவும் மென்மையான பெண்ணாகவும், லதா கதாபாத்திரத்தில் முன்கோபம் உடைய பெண்ணாகவும் நடித்திருந்தார். இரண்டு வேறுபட்ட குணங்களுடைய பெண்ணாக பிரியாமணி இப்படத்தில் நடித்திருந்தார்.

priyamani-cinemapettai-01
priyamani-cinemapettai-01

அசின்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2008ல் வெளியான திரைப்படம் தசாவதாரம். இப்படத்தில் கமல் ஹாசன், அசின், மல்லிகா, ஷெராவத் என பலரும் நடித்து இருந்தார்கள். இப்படத்தில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடித்திருந்தார். அசின், கோதை மற்றும் ஆண்டாள் கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

asin
asin

Trending News