வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

40 வயதிலும் திருமணம் செய்யாமல் முரண்டு பிடிக்கும் 6 தமிழ் நடிகைகள்.. இவங்க சொல்ற காரணம் எதுவும் நம்புற மாதிரி இல்லையே

தற்போதெல்லாம் கோலிவுட்டில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதே அளவிற்கான முக்கியத்துவம் நடிகைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சில நடிகைகள் பெண்ணிய  மைய திரைப்படங்களிலும் நடித்து அதில் வெற்றி வாகையும் சூடுகின்றனர். இதனால் பெரும்பாலான நடிகைகள் தங்களது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே  இருக்கின்றனர்.

ஏற்கனவே 30- 40 வயதில் திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா,  தமன்னா  போன்ற சில நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில் 40 வயதிற்கு மேற்பட்ட நடிகைகள் சிலரும் இன்று வரை திருமணம் செய்யாமல்  இருக்கின்றனராம். இது பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய சில நடிகைகள் திருமணத்தை காரணங்கள் பல சொல்லி தட்டிக் கழித்துவிட்டனராம். அந்த வகையில் இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நடிகைகளின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கௌசல்யா: நடிகை கௌசல்யா பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தளபதி விஜயுடன் இணைந்து நிறைய படங்கள் நடித்துள்ளார். இவருக்கு 40 வயது ஆகியும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். காரணம் கேட்டால் சினிமா துறையில் ஏதாவது சாதித்துவிட்டு தான் திருமணம் செய்வேன் என்கிறாராம்.

kausalya
kausalya

நக்மா: 90களில் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் நக்மா. இவரும் இந்திய கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலியும் காதலித்தனராம். ஏதோ ஒரு காரணத்திற்காக நக்மாவுடன் இருந்த உறவை கங்குலி பிரேக்கப் செய்ய, பிறகு நக்மா சரத்குமாருடன் நெருங்கி பழக ஆரம்பித்தாராம். ஆனால் சரத் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததால், நக்மா சரத்குமார் உறவு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதன் பிறகு நக்மா திருமணம் செய்துகொள்ளவில்லை.

nagma
nagma

கிரண்: சீயான் விக்ரமுடன் இணைந்து கிரண் நடித்த ஜெமினி திரைப்படம் இன்றுவரை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாத படமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கிரன் பல படங்களில் நடித்துள்ளார். தனக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை துணை கிடைக்காததால் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாராம் கிரண்.

kiran
kiran

தபு: 50 வயதான தபு தமிழில் சில படங்களில் தோன்றினாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். என்ன காரணமோ தெரியல இன்னும் தபு திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

tabu
tabu

சோபனா: பரத நாட்டியக் கலைஞரும் நடிகையுமான சோபனா  50 வயதிற்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஸ்ருதி ராஜ்: தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு அதை விட்டு முழுவதும் விலகி சீரியலில் நடிக்க வந்தவர் தான் ஸ்ருதிராஜ். இவர் ஆபீஸ், தென்றல், அழகி போன்ற தொடர்களில் கதாநாயகியாக நடித்து  தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். 40 வயதான ஸ்ருதி இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் எது என்று தெரியவில்லை.

Trending News