ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கூழாங்கல்லுக்கு ஆசைப்பட்டு வைரக்கல்ல விட்டோம்.. நல்ல படம் ஏன் நாசமா போகுது? இதான் காரணம்

ஜமா என்ற ஒரு படம் திரைக்கு வந்தது தமிழ் ரசிகர்களுக்கே தெரியவில்லை. படம் தியேட்டரை விட்டு வெளியேற்றப்பட்ட பின்பு தான் தெரிந்தது ஒரு சிறந்த திரைப்படம் மிஸ் செய்துவிட்டோம் என்று.

என்ன ஒரு கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த சவுண்ட் சிஸ்டம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லை என இன்று தமிழ் ரசிகர்கள் ஏங்கி கொண்டுள்ளனர். குறைந்த முதலீட்டில் எடுக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் ஏன் ஆதரவு இல்லை? ஏன் புதுமுக இயக்குனர்கள் வெற்றி பெற முடியவில்லை.

முன்பு என்றும் இல்லாதது போல் தமிழ் சினிமாவில் ஜாதி படங்கள் அதிகரித்து விட்டன. வாரத்திற்கு ஒரு படமாவது ஜாதி படங்களாக இருக்கிறது. இதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் மற்ற மொழி படங்களுக்கு ஆதரவு தெரிவித்தது தான் மிகப்பெரிய பிரச்சனை.

இன்று புஷ்பா 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டுகிறது. லக்கி பாஸ்கர் மலையாள படம் 100 கோடியை தாண்டி விட்டது என்றால் அதற்கு காரணம் தமிழ் ரசிகர்கள் தமிழ் சினிமாவை புறக்கணித்துதான்.

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற 10 படங்களை எடுத்துக் கொண்டால் ஜாதி, மதம் இல்லாத கதைசம்முள்ள படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளது.

இதை ஜாதி இயக்குனர்கள் புரிந்து கொள்ள வேண்டும் தன் ஜாதிக்காக படம் எடுப்பது தவிர்த்து தமிழ் சினிமா வளர்ச்சிக்காக நல்ல திரைக்கதை கதை உள்ள படங்களை எடுக்க முன் வர வேண்டும்.

Trending News