கொரோனா பரவல் காரணமாக சில அதிரடி உத்தரவுகளை அரசு அறிவிக்கிறது. ஊரடங்கு தவிர கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேறு வழியும் கிடையாது. இதனால் கூலித் தொழிலாளி முதல் மிகப்பெரிய வர்த்தகம் செய்யும் முதலாளிகள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.
அதேபோல் சினிமாத்துறையில் படப்பிடிப்பு நிறுத்தப்படுவதாலும், திரையரங்கு மூடபடுவதாலும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கிறது. தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களின் படங்கள் காலவரையின்றி தள்ளிப் போவதால் பல கோடி இழப்பை சந்திக்கிறது.
பல மூத்த தயாரிப்பாளர்களும் தன்னுடைய திரைவாழ்க்கையில் இது போன்ற நெருக்கடியான சூழலை சந்தித்ததே இல்லை எனக் கூறுகிறார்கள். ஏனென்றால் இந்தக் கொரோனா பரவல் பணக்காரர் முதல் அடித்தட்டு மக்கள் வரை நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தமிழ் சினிமா 500 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளி போவது தான். அஜித்தின் வலிமை, ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர், ராதேஷ்யாம் போன்ற பிரம்மாண்ட படங்கள் பலமுறை தேதி குறிப்பிட்டு ரிலீஸ் தள்ளிப் போனதால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக தமிழ் சினிமா 500 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. வருடத்தின் கடைசியில் நஷ்டம் ஏற்பட்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் ஆண்டின் தொடக்கத்திலேயே 500 கோடி நஷ்டத்தால் மிகப்பெரிய நெருக்கடியி ல் தமிழ் சினிமா உள்ளது.
தற்போது ஊரடங்குகளில் தளர்வுகள் அறிவித்துள்ளதால் விரைவில் 100 சதவீத இருக்கைகள் உடன் திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டால் பிரம்மாண்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்றால் ஓரளவு நஷ்டத்தை சமாளிக்க முடியும்.