புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முன்னணி நடிகருக்கு கொக்கி போடும் நடிகை.. கண்டுகொள்ளாத நடிகர்

சினிமாவில் நடிகைகளின் மார்க்கெட் சற்று டல் அடிக்க தொடங்கி விட்டாலே போதும் ஏதேனும் ஒரு முன்னணி நடிகர் படத்தில் நடித்து இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் நடிகைகள் பிரபல நடிகர்களுக்கு தூது அனுப்புவது, அந்த நடிகருக்கு மட்டும் இரவு விருந்து அளிப்பது எல்லாம் திரையுலகில் வழக்கமாக நடைபெறும் விஷயம் தான்.

அந்த வகையில் தற்போது இளம் நடிகை ஒருவர் முன்னணி நடிகர் ஒருவருக்கு வலைவிரித்து வருகிறாராம். கோலிவுட்டில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான அந்த நடிகை அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு ஒருவழியாக அந்த ஆசையை நிறைவேற்றி விட்டாராம்.

பின்னர் மீண்டும் உச்ச நடிகரின் உறவினருக்கு கொக்கி போட்டு அவரது பட வாய்ப்பையும் தட்டி தூக்கி விட்டார். இப்படி அடுத்தடுத்து தனது ஆசையை நிறைவேற்றி வந்த நடிகை தற்போது தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளாராம்.

அதன் முதற்கட்டமாக நடிகருக்கு தூது அனுப்பியுள்ள நடிகை எப்படியாவது நடிகரின் கவனத்தை ஈர்க்க பல முயற்சிகளில் இறங்கி இருக்கிறாராம். ஆனால், முன்னணி நடிகர், நடிகையை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம். இதனால் அப்செட்டான ஆன நடிகை முயற்சியை கைவிடாமல் எப்படியாவது அவர் படத்தில் நடித்தே தீர வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகிறாராம்.

நடிகைகள் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். சிறிது காலம் இடைவெளி விட்டால் அவ்வளவு தான் சரி புதுமுகத்தை ரசிக்கும் ஆர்வத்தில் பழைய முகங்களை மறந்து விடுவார்கள். எனவே தான் நடிகைகள் ஒரு பட வாய்ப்பை கைப்பற்ற இந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து வருகிறார்கள். ஆனால் ஹீரோக்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது.

Trending News