வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் டிவியால் சாவின் விளிம்பிற்கு செல்லும் காமெடி நடிகர்கள்.. செஞ்சாலும் குத்தம் செயலானாலும் குத்தமா!

தமிழ் திரையுலகில் நடிகர்கள் விவேக், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்டோரின் காமெடிகளுக்கு இன்றுவரை ரசிகர்கள் ஏராளம் அந்த அளவிற்கு இவர்களது காமெடிகள் வயிறு குலுங்க நம்மை சிரிக்க வைக்கும், அந்த வகையில் இவர்களோடு சேர்ந்து துணை நகைச்சுவை பல நடிகர்களும் நடிப்பர்.

அதில் முக்கியமானவர்கள் என்றால் சிங்கமுத்து, போண்டாமணி, செல்மணி உள்ளிட்ட பலரை சொல்லலாம். இந்த நிலையில் அண்மையில் சில வருடங்களாகவே விஜய் டிவி மற்றும் யூடியூப் சேனல் மூலமாக பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர்கள் சினிமாவில் ஈஸியாக வாய்ப்புகளைப் பெற்று நகைச்சுவை நடிகர்களாக உருவெடுத்து நடித்து வருகின்றனர்.

Also Read : பணம் பாதாளம் வரை செல்லும்.. விஜய் டிவியின் பித்தலாட்டத்தை வெளிப்படையாக பேசிய சாய் பல்லவி

அதில் விஜய் டிவி நடத்திய குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த புகழ் மற்றும் பாலா உள்ளிட்ட இருவரும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நகைச்சுவை நடிகர்களாக நடித்து வருகின்றனர். அதேபோல பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்த கொண்ட நடிகர் ராமர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் யூடியூப் சேனலில் மூலமாக பிரபலமடைந்த சில நடிகர்களும் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாகவும், துணை நடிகர்களாகவும் அறிமுகமாகி நடித்து வருகின்றனர். இதன் காரணமாக வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் நடித்த துணை காமெடி நடிகர்களுக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என சொல்லலாம்.

Also Read : சமந்தா போல் நோயால் பாதிக்கப்பட்ட விஜய் டிவி பிரபலம்.. ஆறுதல் சொல்லி ஆச்சரியப்பட வைத்த சம்பவம்

இதனால் பல துணை நகைச்சுவை நடிகர்களும் தற்போது வாய்ப்பில்லாமல் எந்தவொரு படங்களிலும் நடிக்காமல் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து நடிகர் சங்கமும் பெரிதாக எடுத்துக்கொண்டு இந்தப் பிரச்சனையை தீர்க்காமல் அவர்களும் உதறித் தள்ளிவிட்டு போய்விடுகிறார்கள்.

அந்த வகையில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நெல்லை சிவா திருமணம் கூட செய்து கொள்ளாமல் சினிமாவே கதி என இருந்த நிலையில் அவர் இறக்கும் தருவாயில் கையில் பணமே இல்லாமல் இறந்தார் என சோகமாக தெரிவித்தனர். விஜய் டிவி மற்றும் சில யூடியூப் சேனல்களில் பிரபலமடைந்த சிலரால் தங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர். புது முயற்சியில் நல்ல நடிகர்களை வெளிக்கொண்டு வரும் விஜய் டிவிக்கு நல்லது செஞ்சாலும் குத்தம் செய்யாவிட்டாலும் குத்தம் என்பது போன்று மாறி விட்டது.

Also Read : விவாகரத்தான 5 போட்டியாளர்களை பொறுக்கி எடுத்த விஜய் டிவி.. டிஆர்பிக்காக இப்படியல்லாமா பண்ணுவீங்க!

Trending News