தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுத்து விடலாம். ஆனால் 1940 ஆம் ஆண்டு பிரபல நடிகரை வைத்து இரட்டை வேடத்தில் டி ஆர் சுந்தரம் படத்தை எடுத்துள்ளது தான் தற்போது ஆச்சரியமாக உள்ளது.
தமிழ் சினிமாவில் அன்றைய கால நடிகர் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் தான். ஆனால் அப்போது இவர்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு பல நடிகர்கள் இருந்துள்ளனர்.
பி யு சின்னப்பா தமிழ் சினிமாவில் நடித்த போது இவருக்கு என கோடான கோடி ரசிகர்கள் இருந்துள்ளனர். அப்போதெல்லாம் இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் அலைமோதுமாம்.
பி யு சின்னப்பா குதிரை வண்டியில் வந்தால் அவரை பார்ப்பதற்காக வரிசையாக நிற்கும் ரசிகர்கள் பார்த்த சந்தோஷத்திலேயே மயங்கி விழுந்து விடுவார்கள். அந்த அளவிற்கு இவரை ரசித்துள்ளனர் ரசிகர்கள்.
பி யு சின்னப்பா வைத்து டி ஆர் சுந்தரம் இரட்டை வேடத்தில் உத்தமபுத்திரன் படத்தை எடுத்துள்ளார். இவர்தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் இரட்டை வேடத்தில் நடித்தவர். அப்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவு தொழில்நுட்ப வசதி இல்லாததால் ஜெர்மனியிலிருந்து இப்படத்தை ஒளிப்பதிவு செய்வதற்காக ஒளிப்பதிவாளரை வரவழைத்து படத்தை எடுத்துள்ளனர்.
இப்படம் வெளியான பொழுது வில்வண்டி மற்றும் சைக்கிளில் வந்து நிறைய பேர் இப்படத்தை திரையரங்கில் பார்த்துள்ளனர். அந்தளவுக்கு இவர் படத்தின் மீதான வரவேற்பும் ரசிகர்களும் இருந்துள்ளனர்.