திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பச்சோந்தியாக மாறும் சித்தார்த்.. பட வாய்ப்பிற்காக இப்படியா செய்வது

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் தமிழில் நல்ல வரவேற்ப்பை பெற்று அவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. ஆனால் சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் டெல்லி பையன் அதனால் ஹிந்தியை சரளமாக பேசுவேன்.

அதனால்தான் இந்த மொழியில் சுவாரஸ்யமாக இருக்கும் ஸ்கிரிப்ட்டை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் வித்தியாசமான ரோல் கிடைக்கும் வரை நடிப்பேன் இல்லையென்றால் வேறு ஏதாவது ஒரு வேலையை பார்த்து பிழைத்துக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

இதனைப் பார்த்த பலரும் அவருக்கு எதிராக சோசியல் மீடியாவில் கருத்துக்களைக் கூறிவருகின்றனர். ஏனென்றால் சித்தார்த் சமீபகாலமாக சமூக பிரச்சினைகளுக்கு எதிராக பல கருத்துக்களை வெளியிட்டு வந்தார். அதில் முக்கியமாக ஹிந்திக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அவர் ஹிந்தியை பற்றி இவ்வளவு பெருமையாக பேசி இருப்பது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. தற்போது அவருக்கு ஹிந்தியில் வாய்ப்பு கிடைத்தால் தான் இந்தி மொழியை பற்றி அவர் பெருமையாக பேசுகிறார் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இப்படி நேரத்திற்கு தகுந்தாற் போல் பேசும் சித்தார்த்தை ரசிகர்கள் இதுக்கு பேசாம நீங்க பானி பூரி விக்கலாம் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Trending News