தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவராகவும், ஹீரோக்களுக்கு நண்பராகவும் நடித்து வந்த அந்த மூன்றெழுத்து நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஒன்றில் அவரது நண்பர் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்தார். பின்னர் தனது திறமையால் ஒருவழியாக ஹீரோவாக அறிமுகமானார்.
அவர் ஆசைப்பட்டது போலவே அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமானார். அதேபோல் அவரது படங்களும் வெற்றி பெற்றன. நல்ல இயக்குனர்களுடன் கைகோர்த்து நல்ல படங்களை வழங்கி வந்த அந்த நடிகர் தவறான சேர்க்கையால் அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்தார். அதன் காரணமாக மீண்டு எழ முடியாத அளவிற்கு கடனில் விழுந்து விட்டார்.
தற்போது அந்த கடனில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்து வரும் மூன்றெழுத்து நடிகர் ஏற்கனவே தன்னுடன் வெற்றிப் படத்தில் நடித்த ஒல்லி நடிகையிடம் உதவி கேட்டுள்ளார். கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு புதிய நடிகைகள் வருவது ஒன்றும் புதிதல்ல. அந்த வரிசையில் தமிழ் சினிமாவிற்கு புதிதாக வந்தவர் தான் அந்த ஒல்லி நடிகை.
ஒல்லி நடிகையும், மூன்றெழுத்து நடிகரும் இணைந்து நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு ஒல்லி நடிகைக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். ஒரே நாளில் பிரபலமானார்.
ஒல்லி நடிகைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த அந்த மூன்றெழுத்து நடிகர், அவரது புகழை பயன்படுத்த நினைத்து வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். ஆனால் கடன் மற்றும் கதை சொதப்பல் காரணமாக அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. மீண்டும் இவர்கள் இணைந்த படம் இருவருக்குமே சினிமாவில் எண்ட் கார்டு போடும் அளவுக்கு மாறிவிட்டது.
இந்நிலையில், மறுபடியும் அந்த ஒல்லி நடிகையை சந்தித்து மூன்றெழுத்து நடிகர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். புது இயக்குனரின் கதை நன்றாக உள்ளது. நாம் இருவரும் இணைந்து நடித்தால் மறுபடியும் ஒரு ஹிட் கொடுக்க முடியும். அது நம் இருவருக்கும் பயன் தரும் என்றும் கூறியுள்ளாராம். ஒல்லி நடிகைக்கும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால், மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பார் என்றே தெரிகிறது.