வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஹீரோவாக இருந்தாலும் நல்ல இயக்குனராக மிஸ் ஆன 3 நடிகர்கள்.. இதில் 2வது பார்ட்டி, செம கெட்டி!

சினிமாவில் மட்டுமே பல அற்புதங்கள் நடக்கும். ஒளிப்பதிவாளராக சினிமாவுக்குள் நுழைந்து பின்னால் தவிர்க்க முடியாத இயக்குனர்களாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் மகேந்திரன், கே வி ஆனந்த் போன்றோரைச் சொல்லலாம்.

அதேபோல் இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பலரும் பின்னாளில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களை குறித்து பார்க்கலாம்.

அமீர்: தான் எடுக்கும் ஒவ்வொரு படங்களும் தரமாக இருக்கும் என்பதை படங்கள் மூலமாக ரசிகர்களுக்கு உணர்த்தியவர் அமீர் சுல்தான். இவர் இயக்கிய ராம், மௌனம் பேசியதே, பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களைப் பார்க்கும்போது இவர் ஏன் படம் இயக்காமல் இருக்கிறார் என்ற ஒரு கேள்வி கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் எழும். நடிகராக வடசென்னை போன்ற படத்தில் பெயர் எடுத்திருந்தாலும் இயக்குனராக இவரை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர்.

ameer-cinemapettai-01
ameer-cinemapettai-01

சசிகுமார்: இவர் எடுத்த சுப்பிரமணியபுரம் என்ற ஒரு படம் போதும். காலத்துக்கும் இவரது பெயர் சொல்லிக் கொண்டே இருக்கும். இவ்வளவு ஏன் பாலிவுட்டில் வெற்றிபெற்ற கேங்க்ஸ் ஆஃப் திஸ்பூர் என்ற படம் எடுக்கவே சுப்பிரமணியபுரம் தான் காரணம் என அந்தப்படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் கூறியது நினைவிருக்கலாம். இவர் ஹீரோவாக வெற்றி படங்கள் கொடுத்தாலும் இயக்குனராக மிஸ்ஸிங்.

sasikumar-cinemapettai
sasikumar-cinemapettai

சமுத்திரக்கனி: கருத்து ஊசி போடுகிறார் என பலராலும் கிண்டல் செய்யப்பட்டாலும் பெரும்பாலான ரசிகர்களுக்கு இவர் ஏன் படம் இயக்கவில்லை என்ற ஏக்கம் உள்ளது. தற்போது நடிகராக பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் இயக்குனராக பணியை தொடங்க முடியவில்லை எனவும், விரைவில் என் இயக்கத்தில் ஒரு படம் எதிர் பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

samuthirakani-cinemapettai
samuthirakani-cinemapettai

இப்படி பல பேர் ஆரம்பத்தில் இயக்குனராக நல்ல நல்ல படங்களை கொடுத்து விட்டு தற்போது நடிகராக மாறி மீண்டும் படம் இயக்க முடியாமல் தடுமாறுகின்றனர். இதில் சசிகுமார் ஏற்கனவே விஜய்க்கு ஒரு கதையை சொல்லி ஓகே செய்து வைத்துள்ளார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

Trending News