சினிமாவை பொருத்தவரை எப்போதுமே நடிகர் மட்டும் நடிகைகளுக்கு அதிகப்படியான வரவேற்பு இருக்கும் ஆனால் ஒரு சில நடிகர்கள் தங்களது அசாத்திய நடிப்பு மூலம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்து தங்களுக்கென சினிமாவில் நிரந்தரமான இடத்தைப் பிடிப்பார்கள்.
அந்த வரிசையில் மனோரமா, சிங்கம்புலி மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் கதாநாயகர்களை தாண்டியும் ரசிகர்கள் மனதில் தங்களுக்கான இடம் பிடித்துள்ளனர்.
அதாவது படம் முடிந்த பிறகும் கூட அவங்க நடிப்பும் அந்த தாக்கமும் ரசிகர்கள் மனதில் இருக்குமானால் அந்த கதாபாத்திரம் தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கும்
அப்படி தமிழ் சினிமாவில் தங்களது நடிப்பு திறமை மூலம் ரசிகர்கள் மனதில் குடியேறிய நடிகர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையில் பெயர் பெற்று கொடுத்த கதாபாத்திரம் என்ன என்பதை பார்ப்போம்.
ஆயுத எழுத்து: மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து திரைப்படம் வசூல் ரீதியாக சற்று தடுமாறியிருந்தாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் சூர்யாவின் நடிப்பு படத்தின் வெற்றிக்கு காரணமாகயிருந்தது.
கில்லி: தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவில் மறக்க முடியாதபடமாகயிருப்பது கில்லி. இப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவிற்கு வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்த முத்துப்பாண்டி கதாபாத்திரமும் பேசப்பட்டது. இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத கதாபாத்திரமாக உள்ளது முத்துப்பாண்டி என்ற வில்லன் கதாபாத்திரம் தான். அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார்.
வின்னர்: வின்னர் படம் என்றாலே அனைவருக்கும் டக்குனு ஞாபகத்துக்கு வருவது வடிவேலுவின் காமெடி கதாபாத்திரம். இந்த படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க வடிவேலு காமெடி காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் சுப்ரமணியம்: சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பிடித்த நடிகையாக மாறியவர் ஹாசினி என்ற ஜெனிலியா. இப்படத்தில் இவரது குழந்தைத்தனமான நடிப்பு இன்றுவரை ரசிகர் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.
வாரணம் ஆயிரம்: சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் பல முக்கியமான படங்கள் உள்ளன அந்த வரிசையில் இடம் பெற்ற திரைப்படம் வாரணம் ஆயிரம். இப்படத்தில் அனைத்துரசிகர்களுக்கு பிடித்த கதாபாத்திரமாக அமைந்தது சூர்யா அப்பாவாக நடித்த கிருஷ்ணா கதாபாத்திரம் தான். இன்று வரை ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி: பாகுபலி படத்தில் ஆயிரம் கோடி வசூல் பெற்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் பிரபாஸ் மற்றும் சத்யராஜ் . பிரபாஸ் ஹீரோவாக இப்படத்தில் கலக்கி இருந்தாலும் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தது கட்டப்பா என்ற கதாபாத்திரம் தான். இப்படத்தில் எத்தனை கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தாலும் கட்டப்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.
தனி ஒருவன்: அரவிந்த்சாமியின் தூங்கிக் கொண்டிருந்த சினிமா வாழ்க்கையை தட்டி எழுப்பிய கதாபாத்திரம்தான் சித்தார்த் அபிமன்யு. இப்படத்தின் வெற்றிக்கு வில்லனாக நடித்த அரவிந்த்சாமி நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
சாட்டை: சமுத்திரகனி பல படங்களில் சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த மாதிரி சாட்டை படத்தில் ஒரு சிறந்த ஆசிரியராக தயாளன் எனும் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்து ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக காட்டியிருப்பார். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.