ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

மாஸ் ஹீரோவாக ஆசைப்பட்டு மண்ணைக் கவ்விய 5 நடிகர்கள்.. புகழ் போதை யாரை விட்டுச்சு

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து பிரபலமடைந்த நடிகர்கள் அதன் பிறகு சினிமாவில் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போயுள்ளனர். பின்பு பெரிய அளவில் எந்த ஒரு படமும் நடிக்காமல் கிடைக்கும் ஒரு சில சின்ன வாய்ப்புகளை பயன்படுத்தி தற்போது நடித்து வரும் நடிகர்களை பற்றி பார்ப்போம்.

ஷாம்: குஷி போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த ஷாம் அதன்பிறகு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி லேசா லேசா என்ற படத்தில் மூலம் வெற்றியைக் கண்டார். ஆனால் அதன் பிறகு வந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி அடைய வில்லை .

அதனால் மீண்டும் குணச்சித்திர வேடத்தில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தில்லாலங்கடி,தெலுங்கில் வீரா மற்றும் ரேஸ் புரம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

shaam
shaam

சிபிராஜ்: சத்யராஜ் மகனான சிபிராஜ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஒரு சில வெற்றிகளை கண்டார். சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இணைந்து நடித்த வெற்றிவேல் சக்திவேல் மற்றும் கோவை பிரதர்ஸ் திரைப்படம் ஓரளவிற்க்கு ரசிகர்களிடம் சிபிராஜ்விற்க்கு பாராட்டு வாங்கி கொடுத்தது. தற்போது இவர் நடிப்பில் நாய்கள் ஜாக்கிரதை, வால்டர் மற்றும் ஜாக்சன் துறை போன்ற படங்கள் ஓரளவு வரவேற்பு பெற்று தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பரத்: பாய்ஸ் படத்தின் மூலம் பரத் பிரபலம் அடைந்தவர். அதன்பிறகு செல்லமே படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். காதல் படத்தின் மூலம் கதாநாயகனாக வெற்றியும் கண்டார். காதல்,வெயில் நல்ல வரவேற்பை பெற்றன.

அதன் பிறகு மாஸ் ஹீரோவாக ஆசைப்பட்ட பரத்துக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி பேரரசு பழனி படத்தில் நடிக்கவைத்துள்ளார். ஆனால் இந்த படம் பரத்தின் திரை வாழ்க்கையை கீழே தள்ளியது. குறிப்பாக இப்படத்தில் பரத் பேசும் ஆறு, குட்டை போன்ற வசனங்கள் பாராட்டை பெறாமல் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இப்படம் மிகப்பெரிய தோல்வி காரணமாக அமைந்தது. இதன் பிறகு சினிமாவில் பெரிய அளவில் வெற்றி தரமுடியாமல் பொட்டு போன்ற ஒரு சில படங்களில் மட்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

bharath
bharath

ஜெய்: பகவதி மற்றும் சென்னை 600028 போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த ஜெய் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒரு படமும் ஹீரோவாக இவருக்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது கேப்மாரி மற்றும் பார்ட்டி போன்ற ஒரு சில படங்களில் மட்டும் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

நகுல்: பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நகுல் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வெற்றிதராமல் தடுமாறினார் அதனால் ஒரு சில காலங்கள் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். மேலும் மாசிலாமணி, வல்லினம் மற்றும் செய் போன்ற ஒரு சில படங்களின் சுமாரான வெற்றியை மட்டுமே கொடுத்துள்ளார்.

nakul
nakul

மேற்கண்ட நடிகர்கள் தவிர சிவா மற்றும் ஸ்ரீகாந்த் போன்ற பல நடிகர்கள் ஆரம்ப கட்டத்தில் பெரிய அளவில் வெற்றிகளை கொடுத்தனர் அடுத்தடுத்து வெற்றியை தக்கவைக்க தெரியாமல் தடுமாறி தற்போது ஒரு சில நடிகர்கள் படங்களில் கதாநாயகனாக, ஒரு சில நடிகர்கள் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகின்றனர். இவர்களது லிஸ்டில் ஏராளமான நடிகர்கள் வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News