வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புகழின் உச்சத்தில் இருந்தும் இதுவரை சேராத 5 ஜோடிகள்.. சமந்தா தவம் செய்தும் பலன் இல்லை

தமிழ் சினிமாவில் சில ஜோடிகளின் கெமிஸ்ட்ரி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். அந்த வகையில் ரஜினி-ஸ்ரீவித்யா, கமல்-ஸ்ரீதேவி போன்ற ஜோடிகள் இணைந்து நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெறும். வசூல் ரீதியாகவும் வெற்றி பெறும். அதேபோல் சில ஜோடிகள் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நடிகர், நடிகைகள் ஒரு படங்களில் கூட சேராமல் உள்ளனர்.

கமல்-நதியா: உலகநாயகன் கமலஹாசன் ஸ்ரீதேவி, ஸ்ரீவித்யா, குஷ்பு, ராதிகா அம்பிகா போன்ற பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். 80 களில் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார் கமலஹாசன். இதனால் பலரும் இவரை வெறுப்பது உண்டு. இதனால் நடிகை நதியா கமலுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

ரஜினி-ஊர்வசி: தமிழ் சினிமாவில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து பல ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் மிகப் பெரிய ஹிட்டானது. அந்த காலகட்டத்தில் இருந்து தற்போது உள்ள நடிகை வரை ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்கள். ஆனால் ரஜினி, ஊர்வசி நடிப்பில் ஒரு படம் கூட வெளிவரவில்லை.

விக்ரம்-சிம்ரன்: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சியான் விக்ரம். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்ரம் சிம்ரனுடன் இணைந்து நடித்ததில்லை. விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் சிம்ரன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தாலும் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படத்தில்கூட நடித்ததில்லை.

அஜித்-சமந்தா: விஜய், சூர்யா, விக்ரம், ஜீவா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா. தன் நடிப்பின் மூலம் எக்கச்சக்க ரசிகர்களை கைவசம் வைத்துள்ள சமந்தா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் அஜித்துடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆனால் சமந்தாவிற்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கால்ஷீட் பிரச்சனையால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதால் திரிஷா அந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சிவகார்த்திகேயன்-திரிஷா: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. விஜய், அஜித், கமல், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் நடித்த த்ரிஷா சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்ததில்லை.

Trending News