வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கைவசம் படங்கள் இல்லாமல் கஷ்டப்பட்ட விஜய் சேதுபதியின் நண்பர்.. 2024 புளியங்கொம்பை பிடித்த மிட்டாய் பட ஹீரோ

Tamil comedy Actor Ramesh Tilak play a role in hit movie: “காதலிக்க நேரமில்லை! காமெடிக்கு பஞ்சமில்லை!’ என தமிழ் சினிமாவில் காதலும் காமெடியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்க ரசிக்க தான் நேரமில்லை என்பது போல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நிலையில்லா வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பது போல் அந்தந்த காலகட்டத்தில் நடிகர்கள் வந்து ஸ்கோர் செய்ததோடு காணாமல் போய்விடுவதுண்டு. திரைத்துறையில் நிலைப்பது என்பது கடினமான ஒன்றாக தான் இருக்கிறது.

ஒல்லியான தேகத்தோடு காமெடி நடிகருக்கே உரிய முக பாவனை உடன்  இயல்பான நடிப்பில் வெளுத்து வாங்கும் நடிகர் ரமேஷ் திலக். ஆர் ஜே வான இவர் சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் திரையுரையில் காமெடி நடிகராக அறிமுகமானார்.

பிளாக் காமெடி வகையை தரமாக கையாண்டு முழு நீள நகைச்சுவை படமாக நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சூதுகவ்வும். விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், பாபி சிம்ஹா அசோக் செல்வன் கருணாகரன் என பலரும் நடித்திருந்தனர் ஒவ்வொருவருக்கும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயமாக இருந்தது. பல மடங்கு லாபத்துடன் மாபெரும் வெற்றி பெற்றது சூதுகவ்வும்.

Also read: விரல் விட்டு என்னும் விஜய் சேதுபதியின் 5 ஹிட் படங்கள்.. சிங்கிள் ஹீரோவாக கலங்க வைத்த 96 ராம்

சூது கவ்வும் படத்தில் நண்பர் விஜய் சேதுபதியுடன் இணைந்து அமைச்சரின் மகனை கடத்தும் சமயத்தில போலீசில் மாட்டிக் கொண்ட தன் நண்பர்களை மீட்க போலீஸ் தலையில் துப்பாக்கி  வைப்பார். துப்பாக்கி வைத்ததை பார்த்ததும் முரட்டு போலீஸ் சிரிக்க தொடங்கியதும் “துப்பாக்கி காட்டுறன் சிரிக்கிற” என ஒரே ஒரு வசனத்தை சொல்லி மொத்த தியேட்டரையும் சிரிக்க வைத்தது ரமேஷ் திலக்கின் ஹைலைட்.

காமெடி நடிகராக வலம் வந்த ரமேஷ் திலக்கிற்கு ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் ஒரு சிறந்த திருப்புமுனையாக இருந்தது. தொடர்ந்து  நேரம், டிமான்டி காலனி, காக்கா முட்டை,  போன்ற படங்களில் ஹிட் படங்களில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான குட் நைட்  திரைப்படத்தில் நாயகனுக்கு மாமாவாக செமயா நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

குட் நைட் படத்திற்கு பின் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் அதிர்ஷ்டம்  கதவை தட்டுவது போல் ஞானமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் மிட்டாய் ஹீரோ ரமேஷ் திலக். வேட்டையன் படத்தின் விஎப்எக்ஸ் வேலைகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ஒரு படத்துக்கு 25 கோடி சம்பளம்.. மணிரத்தினத்தின் அசர வைக்கும் சொத்து மதிப்பு

Trending News