வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எங்கிட்ட அவங்களை புகழ்ந்து பாடாத.. வடிவேலுவின் உண்மையான முகம் இது தானாம்.!

நாம் சினிமாவில் பார்த்து ரசிக்கும் நடிகர்கள் அனைவரும் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே உள்ளார்களா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அப்படி நம் தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு.

அவர் திரையில் ஒரு காட்சியில் தோன்றினாலே அனைவருக்கும் சிரிப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு தன் உடல் மொழியாலே காமெடி செய்பவர். இதனால் அவர் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருந்தார். அப்படிப்பட்டவருக்கு நிஜ வாழ்வில் வேறொரு முகம் உண்டு.

கஷ்டப்பட்ட ஒருவருக்கு திடீரென புகழும், பணமும் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் வடிவேலு தனக்கு கிடைத்த பணம் புகழ் போன்றவற்றால் சற்று ஆணவத்துடன் நடந்து கொண்டிருக்கிறார். வடிவேலு தான் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் தனியாக காமெடி செய்வது கிடையாது.

ஒரு கூட்டம் இவரை சுற்றியே இருக்கும். உதாரணமாக போண்டாமணி, அல்வா வாசு, முத்துகாளை, தாடி பாலாஜி, சிங்கமுத்து உள்ளிட்ட பலரும் இவருடன் இணைந்து காமெடி செய்திருக்கின்றனர். அப்படி தன்னுடன் சேர்ந்து நடிக்கும் அவர்கள் மற்ற காமெடி நடிகர்களை பற்றி புகழ்ந்து பேசினால் வடிவேலுவுக்கு பிடிக்காது. உடனே அவர்களுக்கு தன்னுடைய அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்க மாட்டார். அவர்களை சினிமாவில் வளரவும் விடமாட்டார்.

அப்படி இவரால் பாதிக்கப்பட்ட பலபேர் இருக்கின்றனர். நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு படப்பிடிப்பின்போது கவுண்டமணி, செந்தில் காமெடி பற்றி புகழ்ந்து பேசியது வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை. அதனால் அந்த ஒரு படத்திற்கு பிறகு இன்று வரை தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுக்கவில்லை. நடிகர் வடிவேலுவுக்கு அளவுக்கு அதிகமாக கோபம் வரும்.

அதன் காரணமாக ஒரு முறை தேர்தலில் விஜயகாந்துக்கு எதிராக மிகவும் மோசமான வார்த்தைகளை எல்லாம் பேசி பிரசாரம் செய்தார். சொல்லப்போனால் வடிவேலு சினிமாவில் வளர்வதற்கு ஒரு உதவியாக இருந்தவர் விஜயகாந்த். அவரையே தரக்குறைவாக பேசியதால் சினிமாவில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இது தவிர வடிவேலு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோபம் வரும் அளவிற்கு நடந்து கொண்டார் என்ற ஒரு தகவலும் இருந்தது.

இவை அனைத்திற்கும் மேலாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் அவருக்கு சினிமாவில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

தற்போது வடிவேலு அந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். நம்மையெல்லாம் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் ஒரு மனிதரின் முகத்துக்குப் பின்னால் இப்படி ஒரு முகம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News