ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அப்படியே உருவி போடப்பட்ட தமிழ் பாடல்கள்! இது உலகமகா காப்பிடா சாமி

தமிழ் சினிமாவில் ஒரு பாடலை காப்பியடித்து இன்னொரு படத்தில் போடுவது சர்வ சாதாரணம். இதில் மொழி, நாடு, இனம் என்ற எந்த பேதமும் நம் இசையமைப்பாளர்களுக்கு கிடையாது. கைக்கு கிடைத்துவிட்டால் சாமி பாடலானாலும் காப்பியடிக்காமல் விடமாட்டார்கள். வாருங்கள் ஒவ்வொரு இசையமைப்பாளரும் முழு மூச்சுடன் அடித்த காப்பியை பாப்போம்.

இளையராஜா:

தமிழ் சினிமா உள்ளவரை இளையராஜாவின் இசை ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் இருக்கும் என்பதை அடித்துக் கூறலாம். அந்த அளவில் நம் ஒவ்வொருவர் வாழ்வோடும் கலந்துவிட்ட இசை அவருடையது. ஆனால் அவரும் காப்பி அடித்தார் என்பது ஆச்சர்யத்தக்க உண்மை.

ஹிந்தியில் 1967ல் கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் வெளிவந்த படம் உப்கார். இந்த படத்தில் வரும் Kasme Waade Pyar Wafa என்னும் பாடலை கேட்டுப்பாருங்கள் அது தமிழில் எந்த வருடம் எந்த படத்தில் வெளியானது என்ற உண்மை விளங்கும்.

சிற்பி:

வெகு சில படங்களிலேயே உச்சம் சென்றவர், பல கார்த்திக் படங்களுக்கு இசையமைத்தவர். இவரது புகழை உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வரும் அழகிய லைலா ஒரு பாடல் போதும். தமிழ் நாடு முழுவதும் சக்கைபோடு போட்ட பாடல் ஆனால் இந்த பாடலும் அரேபிய பாடலான ஒரு பாடலின் உருவல்தான். இதோ அந்த பாடலின் லிங்க் உங்களுக்காக

து மட்டுமல்ல இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே உருவல்கள்தான். இவர் ஒரு சிறந்த அரேபிய இசை காப்பிட்டாளர்.

கார்த்திக் ராஜா:

இளையராஜாவின் மகன் உல்லாசம் படத்தின் மூலம் நம் மனதை தொட்டவர், மெல்லிசையால் உணர்ச்சி ததும்ப வைத்தவர். இவர் இசையமைத்த உல்லாசம் படத்தின் அனைத்து பாடல்களுமே காப்பிதான். உதாரணத்திற்கு வீசும் காற்றிற்கு பாடலின் உண்மையான பதிப்பு இதோ உங்களுக்காக

வித்யாசாகர்:

அர்ஜுன் படத்தை அந்த நாட்களில் ஓட வைத்தது இவரது பாடல்கள்தான். ஜெய்ஹிந்த், கர்ணா, என்று வரிசையாக இவர்களது கூட்டணி வெற்றியை கொட்டித் தீர்த்து.

கர்ணா படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். அதில் வரும் ஏசப்பா ஏசப்பா பாடலின் உரிமையாளர் இவர்தான்

தேவா:

தமிழ் இசையின் காப்பி பாக்டரி என்றால் அது தேவாதான். அந்த அளவிற்கு அனைத்து மொழி படங்களில் இருந்தும் காப்பி அடித்தவர். அதுவும் ஒரே மீட்டுள்ள பாட்டை பல படங்களில் பயன்படுத்தி இருப்பார்.

நாம் வியந்து புல்லரித்து ரசித்த பாட்சா படத்தின் தீம் மியூசிக் கூட டெர்மினேட்டர் படத்தில் இருந்து உருவியதுதான். மன்னிக்கவும் இவருக்கு சாம்பிள் பாடல் போடுமளவிற்கு சினிமாபேட்டை தரவுதளத்தில் இடமில்லை.

இசையில் காப்பி அடிப்பது என்பது இப்போதுள்ள அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் வரை தொடர்ந்து வருகிறது, அதனால் அன்று முதல் இன்றுவரை இந்த பாரம்பர்ய காப்பி கலையை பண்பாட்டுடன் நமது இசையமைப்பாளர்கள் பேணி பாதுகாத்து வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

Trending News