தமிழ் சினிமாவின் தற்போதைய கமர்ஷியல் கிங் என்ற பட்டப் பெயருடன் வலம் வருபவர் அந்த இயக்குனர். தமிழ் சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே முன்னணி இயக்குனர் அளவுக்கு வளர்ந்து விட்டார்.
சமீபகாலமாக அக்கட தேசத்தில் தமிழ் இயக்குனர்களுக்கு நல்ல ஜாக்பாட் அடித்து வருகிறது. அந்த வகையில் தமிழின் முன்னணி இயக்குனர்கள் பலரும் தற்போது தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்க ஆரம்பித்து விட்டனர்.
அப்படி ஒரு பட வாய்ப்பு இந்த இளம் இயக்குனருக்கும் வந்துள்ளது. இதுவரை இல்லாத அதிக சம்பளத்துடன் வந்த வாய்ப்பை விட வேண்டாம் என ஓகே செய்து விட்டு அதற்கான கதையை எழுதி ஹீரோவிடம் சொல்ல சென்றுள்ளார்.
ஆனால் இவர் சொன்ன கதையில் ஆயிரத்தெட்டு மாற்றங்களை செய்து சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் அலையவிட்டு கொண்டிருக்கிறாராம் அந்த நடிகர். மசாலா கதையில் என்ன மாற்றம் என தலையில் அடித்துக் கொள்கிறாராம் அந்த இளம் இயக்குனர்.
இதற்கிடையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரின் பட வாய்ப்பு வந்தபோதும் தெலுங்கு படத்தில் கமிட்டாகி விட்டதாக கூறி அனுப்பிவிட்டாராம். தற்போது தெலுங்கு நடிகர் பண்ணுவதெல்லாம் பார்த்தால் பேசாமல் தமிழிலேயே படம் செய்திருக்கலாம் என கவலையில் உள்ளாராம்.
இதைக் கேள்விப்பட்ட கோலிவுட் வட்டாரங்கள் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது இந்த இளம் இயக்குநரின் நிலைமை என கிண்டல் செய்கிறார்களாம். சமீபகாலமாக தமிழில் இயக்குனர்களை தெலுங்கு நடிகர்கள் ஆதிக்கம் செய்வது அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.