புதன்கிழமை, நவம்பர் 20, 2024

முதல் படத்திலேயே ஹிட் குடுத்த இயக்குனர்கள் – பாகம் 2

தமிழ் இயக்குனர்களின் முதல் திரைப்படங்கள்.

தமிழ் படத்தின் இயக்குனர்களின் முதல் திரைப்படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி வந்தாலும் கடைசில் மாபெரும் இயக்குனர்களாக மாறியுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.

மணிரத்தினம் – பகல் நிலவு

pagal-nilavu-manirathnam
pagal-nilavu

மணிரத்தினம் இயக்கத்தில் முரளி நடிப்பில் வெளியான திரைப்படம் பகல் நிலவு. இப்படத்தில் ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. படமும் வெற்றி பெற்றது.

கௌதம் மேனன் – மின்னலே

Minnale
Minnale

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் மின்னலே. இப்படத்தில் விவேக், ரீமா சென் மற்றும் அப்பாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ்  இசை அமைப்பாளராக அறிமுகமானார்.ஆனால் இந்த படமும் பிரபுதேவா படம் விஐபி படமும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்கும். கவுதம் மேனன் ஸ்டைலில் படம் நன்றாக இருந்தது.

பாலச்சந்தர் – நாணல்

neerkimizhi
neerkimizhi

கே பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ், சவுக்கார் ஜானகி நடிப்பில் வெளியான திரைப்படம நீர்க்குமிழி. இப்படத்தில் இசை வி குமார். கோபாலக்ருஷ்ணன், மேஜர் சுந்தராஜன் என பலர் நடித்த இந்த படம் வெற்றிபெற்றது.

பாரதிராஜா – 16வயதினிலே

16 vayathinile
16 vayathinile

பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 16 வயதினிலே. இப்படத்தில் பாக்யராஜ், ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. பாக்யராஜ் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக பணியாற்றிய படம்.

கமல் – ஹேராம்

hey-ram-Kamal-Haasanகமலஹாசன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான  திரைப்படம் ஹேராம். இப்படத்தில் ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி. கிரிஷ் கர்னாட். நசுருதீன் ஷா. வசுந்தரா தாஸ் மற்றும் வி.எஸ்.ராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஆறு கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த படம் 112கோடி வசூல் செய்தது. ஆனால் பல இடங்களில் தோல்வி அடைத்தது. 

முதல் பாகத்தை பார்க்க 

- Advertisement -spot_img

Trending News