சமீப காலமாகவே திறமை வாய்ந்த தமிழ் இயக்குனர்கள் வரிசையாக ஹிந்தி, தெலுங்கு ஹீரோக்களின் படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தமிழ் ஹீரோக்களை பணத்திற்காக அவமானப்படுத்துகிறார்களோ என்ற சர்ச்சையும் கிளம்புகிறது.
ஏனென்றால் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தொடங்கி அட்லி, மகிழ் திருமேனி, லிங்குசாமி வரை கோலிவுட்டில் திறமை வாய்ந்த இயக்குனர்கள் பிறமொழி ஹீரோக்களின் படங்களை இயக்கி, அவர்களை தூக்கி நிறுத்த பாடுபடுகின்றனர். இந்த லிஸ்டில் வெற்றிமாறனும் சேர்ந்திருப்பது பெருத்த அவமானம்.
Also Read: மகிழ் திருமேனி படத்தின் காப்பி தான் விக்ரம் படமா.? அட்லி போல காப்பி கதையில் சிக்கிய லோகேஷ்
தற்போது வெற்றிமாறன் சூரியின் விடுதலை மற்றும் சூர்யாவின் வாடிவாசல் படங்களின் படப்பிடிப்பு வேளையில் வேகமாக செயல்பட்டு வருகிறார். அடுத்து யாருக்கு படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த வேலையில் தெலுங்கு ஜூனியர் என்டிஆர்-க்கு இரண்டு பாகங்களாக ஒரு படத்தை இயக்குகிறார்.
எதற்காக தெலுங்கு பட ஹீரோவை வளர்க்க அங்கு செல்ல வேண்டும், தமிழ் சினிமாவில் கதாநாயகர்களே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. கேஜிஎப் இயக்குனர் மற்றும் ராஜமவுலி மற்றும் காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி என அவரவர் மொழி படங்களில் வெற்றி பெற்ற மிகப்பெரிய இயக்குனர் அனைவரும் அவர்கள் மொழியின் கதாநாயகர்களை வளர்த்து வருகிறார்கள்.
Also Read: அக்கட தேசத்து ஹீரோவுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன்.. பாலாவை போல் சூர்யாவை கழட்டிவிட்ட சோகம்
இவர்கள் யாரும் தமிழ் ஹீரோவை வைத்து படம் எடுக்க ஆசைப்படுவதில்லை. ஆனால் தமிழ் இயக்குனர்கள் தனது அறிவையும் செயலையும் அவர்களுக்காக கொடுத்து உழைக்க தொடங்கியுள்ளனர். இதனால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி தடைபடுகிறது மற்றும் பணத்தை கொடுத்து இவர்களின் அறிவை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் கூப்பிட்டால் வந்து விடுவார்கள் என்ற எண்ணமும் இருக்கிறது. இது தமிழ் சினிமாவிற்கு ஏற்படும் பெரிய அவமானம் என்பது அவர்களுக்கே தெரியாமல் செய்கின்றனர். இப்படி தமிழ் இயக்குனர்கள் பிறமொழி ஹீரோக்களை வளர்த்து விடுவதற்கு சோசியல் மீடியாவில் கண்டனங்களும் எழுகிறது.
Also Read: மகிழ் திருமேனியுடன் கைகோர்த்த இயக்குனர்.. வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த ஏகே 62