தமிழ் சினிமாவில் ஜீரோ ஹேட்டர்ஸ் நடிகர்களாக இருந்தவர்கள் தங்களுடைய போதை பழக்கத்தால் சினிமா வாய்ப்புகளை பெருமளவில் இழந்த சம்பவங்களை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சினிமாவை பொறுத்தவரை அனைவருக்கும் பிடித்த நடிகர்களாக இருப்பது மிகவும் சிரமமான விஷயம். ஆனால் அதை எளிதில் செய்தவர்தான் ரகுவரன். ஹீரோவாக கேரியரை ஆரம்பித்து பின்னாளில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் வில்லன் நடிகராக வலம்வந்தார்.
அன்றைய காலத்தில் முன்னணி நடிகராக இருந்த ரஜினி நடிக்க விரும்பிய நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் ரகுவரனாம். ஆனால் ரகுவரனிடம் இருந்த ஒரே ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் தன்னால் போதையில் இருந்தால் மட்டும்தான் ஒரு காட்சியை சிறப்பாக நடிக்க முடியும் என நம்பினாராம்.
அதற்காக ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும்போதும் சரக்கு அடிக்காமல் வரவே மாட்டாராம். அதேபோல்தான் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம் வந்த முரளி செய்தாராம். முரளிக்கும் காலப்போக்கில் குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டதாம்.
ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால் கண்டிப்பாக சரக்கு அடித்தால் மட்டும் தான் அதனை உணர்வுபூர்வமாக சிறப்பாக நடித்துக் கொடுக்க முடியும் என நம்பி போதையில் விழுந்தாராம். இந்த இருவருக்கும் பின்னால் படவாய்ப்புகள் குறைந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். சரக்கு போதையை விட புகழ் போதை தான் மோசமானது, ஆனால் அதை இவர்கள் இருவருமே செய்யவில்லை என்பதால் ரசிகர்களுக்கு இவர்களின் மீதான மரியாதை குறையவில்லை என்கிறார்கள்.