தமிழ் படங்களில் அவ்வப்போது சில அப்டேட்கள் வருவதும் திடீரென அவற்றில் சில மாறுபடுவதும் வழக்கமான ஒன்றுதான். அப்படியாக சில படங்களால் உயரத்திற்கு செனறவர்களும் உண்டு சிலர் மொக்கை வாங்கியதுமுண்டு. இப்படி சில மெகாஹிட் படங்களின் நாயகிகள் மாற்றப்பட்டது பற்றி பார்ப்போம்.
3: நடிகர் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் சர்வதேச அளவில் டிரண்டிங் ஆன “ஒய் திஸ் கொலவெறி” பாடல் இடம் பெற்ற படம் 3. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி கண்ட படம். இந்த படத்தில் பெரிதும் பேசப்பட்டது ஆனாலும் இந்த படத்திற்காக முதலில் அமலா பாலிடம் பேசப்பட்டது அவருக்கு அப்போது டேட் கொடுப்பதில் சிக்கல் எழவே படக்குழு ஸ்ருதிஹாசனிடம் கேட்டது.

அந்நியன்: இயக்குனர் சங்கரின் பிரம்மாண்டத்தில் சியான் விக்ரமின் அட்டகாசமான நடிப்பில் ஜெயம் நாயகி சதா ஜோடியிட இமாலய வெற்றி கண்ட படம் “அந்நியன்”. இந்த படத்தினை இந்தி வரை திரையிடுவதற்காக ஏற்கனவே ஜீன்ஸ் படத்தில் சங்கருடன் பணியாற்றிய உலக அழகி “ஐஸ்வர்யா ராய்” தான் கேட்கப்பட்டார். பல்வேறு காரணுங்களுக்காக பிறகு சதாவை நாடியது படக்குழு. சதா விக்ரம் காம்போவில் கலக்கியது படம் .

விஸ்வரூபம்: உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேசனல் தயாரிப்பில் வெளிவந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகும் மாபெரும் வெற்றி கண்ட படம் விஸ்வரூபம். இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்ட இப்படம் கமலஹாசனுக்கு ஒரு மைல் கல்லாகவே அமைந்தது. இந்த படத்தில் பூஜா குமார் நடித்த கேரக்டருக்கு முதலில் சோனாக்ஷி சின்ஹா தான் பேசப்பட்டாராம். சில காரணங்களுக்காக பிறகு பூஜா ஓகே செய்யப்பட்டார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி: உதயநிதி சந்தானம் காம்போவில் காமெடி சரவெடியாக அமைந்த படம் “ஒரு கல் ஒரு கண்ணாடி”. இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி ஜோடியிட பட்டையை கிளப்பியது படம். ஆனாலும் இந்த படத்திற்கு முதலில் அசினிடமும் பிறகு நயன்தாராவிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சில காரணங்களுக்காக பிறகு ஹன்சிகா மோத்வானி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

வாரணம் ஆயிரம்: சூர்யா சமீரா ரெட்டி திவ்யா நடிப்பில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இமாலய வெற்றி கண்ட இப்படம் ஹாரிஸ் ஜெயராஜின் இசைமழையில் நனைத்தது. இந்த படத்தில் திவ்யா நடித்த கேரக்டருக்கு முதலில் தீபிகா படுகோன் பேசப்பட்டார். சில காரண்களுக்காக படக்குழு திவ்யாவை தேர்விட்டது. சமீரா ரெட்டி நடித்த கேரக்டருக்கு ஜெனிலியா பேசப்பட்டார். அடுத்தடுத்த படங்களுக்கான கால அவகாசம் தேவைப்பட பிறகு சமீரா ஒப்பந்தமானார்.
