2015 -2021 வரை 100 கோடிக் மேல் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள். அஜித்தின் ஆரம்பம், வீரம் மற்றும் விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி படங்களை தவிர்த்து மற்ற 100 கோடி வசூல் செய்த படங்கள்.
காஞ்சனா 2
காஞ்சனா 2 அனைவராலும் பாராட்டு பெற்ற சிறந்த திரைப்படம் ஆகும். இந்த படத்தை தயாரித்து நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த படம் 2015-ஆம்
வெளியானது. இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், டாப்சீ, நித்யா மேனன். கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படம்: காஞ்சனா
ஆண்டு: 2015
வசூல்: 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
வேதாளம்
இந்த படத்தின் இயங்குனர் சிவா. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கிறார். இந்த படம் 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முக்கிய நடிகர் அஜித் குமார், சுருதி ஹாசன், லக்ஷ்மி போன்றவர்கள் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம்: வேதாளம்
ஆண்டு: 2015
வசூல்: 130 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
ஐ
ஐ படம் பெரும் புகழ் பெற்ற இயங்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படமாகும். இந்த படம் 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன் தனது தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் விக்ரம், அமி ஜாக்சன் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
படம்: ஐ
ஆண்டு: 2015
வசூல்: 165 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
24
2016 ஆம் ஆண்டு வெளிவந்த பிரபலமான சூர்யா படத்தில் 24 ஆகும். இந்தத் திரைப்படம் விக்ரம் குமார் இயக்கியது மற்றும் சூர்யா தயாரித்தது. இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இந்த திரைப்படத்தின் முக்கிய நடிகர்கள் சூர்யா, சமந்தா, நித்திய மேனன், சரன்யா பொன்னவானன் போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
படம்: 24
ஆண்டு: 2016
வசூல்: 135 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
தெறி
அட்லீ இயக்கிய பிரபல திரைப்படமாகும்.இந்த படம் தாணு தயாரித்து 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் முக்கிய நடிகர்கள் விஜய், சாந்தா, ஆமி ஜாக்சன், பிரபு, ரதிகா சரத்குமார் போன்றவர்கள் நடித்துள்ளனர்.
படம்: தெறி
ஆண்டு: 2016
வசூல்: 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
கபாலி
கபாலி படம் கலைப்புலி எஸ். தாணு . சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2016 ஆம் ஆண்டு ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆவர்.
படம்: கபாலி
ஆண்டு: 2016
வசூல்: 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
சிங்கம் 3
சிங்கம் 3 பிரம்மாண்டமான படம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படம் ஹரி இயக்கியது மற்றும் லக்ஷ்மன் குமார் தயாரித்தது. இந்த படத்தின் முக்கிய நடிகர்கள் அனுஷ்கா, சுருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர். இந்தத் திரைப்படம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து உள்ளார். இது சூர்யாவின் 34 படமாகும்.
படம்: சிங்கம் 3
ஆண்டு: 2017
வசூல்: 115 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
விவேகம்
விவேகம் என்பது சிவாவின் இயக்கத்தில் பிரபலமான தமிழ் திரைப்படமாகும். தியாகராஜன் தயாரித்த படம் இது. அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஒப்ராய் போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
படம்: விவேகம்
ஆண்டு: 2017
வசூல்: 160 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
மெர்சல்
மெர்சல் சமிபத்தில் வெளியான திரைப்படம். அட்லீ இயக்கி ஹீமா ருக்மணி மூலம் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த ஆண்டு பல சர்ச்சைக்கு இடையில் வெளியான திரைப்படம் ஆகும். இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
படம்: மெர்சல்
ஆண்டு: 2017
வசூல்: 180 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
காலா
காலா படம் தனுஷ் தயாரித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2018 ஆம் ஆண்டு ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆவர்.
படம்: கபாலி
ஆண்டு: 2018
வசூல்: 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
2.0
2.0 படத்தினை லைகா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்தது. இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
படம்: மெர்சல்
ஆண்டு: 2018
வசூல்: 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
பேட்ட
பேட்ட படத்தினை சன் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தின் இசை அமைப்பாளர் அனிருத். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
படம்: பேட்ட
ஆண்டு: 2019
வசூல்: 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
விஸ்வாசம்
விஸ்வாசம் படத்தினை சத்யா ஜோதி நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தின் இசை அமைப்பாளர் இமான் மேலும் தேசிய விருது வேறு பெற்றார். இயக்குனர் சிவா.
படம்: விஸ்வாசம்
ஆண்டு: 2019
வசூல்: 190 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
நேர்கொண்ட பார்வை
அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரீமேக் படமாகயிருந்தாலும் தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதே கூட்டணி தற்போது வலிமை படத்தில் பணியாற்றியுள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தர்பார்
தர்பார் படத்தினை லைகா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்தது. இந்த படத்தின் இசை அமைப்பாளர் அனிருத். இயக்குனர் முருகதாஸ்.
படம்: தர்பார்
ஆண்டு: 2020
வசூல்: 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது
மாஸ்டர்
கொரோனா காலத்திற்கு பிறகு பலரும் தியேட்டர் பக்கம் செல்லாமல் இருந்தனர். ஆனால் மாஸ்டர் படத்திற்கு பிறகு தான் தற்போது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் தியேட்டரில் போய் பார்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டது மட்டும் இல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது விஜய் தளபதி 65 என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். இப்படம் விஜய் ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது மட்டுமில்லாமல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.