சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விமர்சனத்துலையும் வசூலிலும் Top.. ஹிந்தி படங்களை பார்த்து அட்டு Copy அடித்த தமிழ் படங்கள்

தமிழில் நாம் பார்த்து வியந்த பல படங்கள் ஹிந்தி படங்களின் அட்டு காப்பி என்று சொன்னா நம்புவீர்களா? முக்கியமான இன்றளவும் KTV-யில் நாம் மேட்னி ஷோ பார்த்து வயிறு குலுங்க சிரித்திருப்போம்.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்: 2004 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படம், 2003 இல் வெளிவந்த இந்தி படமான முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படத்தின் ரீமேக். இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஷத் வர்ஷி, சுனில் தத், கிரேசி சிங் என்று பலர் நடித்திருப்பார்கள். இந்த படம் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடிக்க, தமிழிலும் ரீமேக் செய்ய பட்டது.

கண்டேன் காதலை: தமன்னாவை இந்த படைத்தில் பார்த்து ராசிக்காதவர்களே இல்லை. அந்த அளவுக்கு துரு துரு என்று அனைவரையும் ஈர்த்திருப்பார். மேலும் இந்த படத்தில், சந்தானத்தின் காமெடி வேற லெவெலில் ஒர்கவுட் ஆகி இருக்கும். இந்த படமும் ஹிந்தி ரீமேக் தான். இந்தியில் சூப்பர் ஹிட்டான “ஜப் வி மேட்” படத்தின் தமிழ் ரீமேக் தான் கண்டேன் காதலை.

தாராள பிரபு: ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இந்த படம் வெளியானது. இந்த படம் ஒரு வித்தியாசமான படமாகவும் அந்த காலகட்டத்தில் பார்க்கப்பட்டது. எம்.எஸ் பாஸ்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் காம்பினேஷன் நன்றாக இருக்கும். இந்த படமும் ஹிந்தி படத்தின் ரீமேக் தான். விக்கி டோனோர் என்ற படத்தை ரீமேக் செய்து தான் தமிழில் தாராள பிரபு என்று வெளியானது.

மனிதன்: உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஹன்சிகா நடிப்பில், வெளியான படம் இது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் வக்கீலாக நடித்திருப்பார். வசூல் வேட்டை நடத்தவில்லை என்றாலும் படத்திற்கு நல்ல விமர்சனம் இருந்தது. இந்த படம், 2013 இல் இந்தியில் வெளிவந்த “ஜாலி எல்எல்பி” படத்தின் ரீமேக் தான்.

காற்றின் மொழி: ஜோதிகா விதார்த் நடிப்பில் உருவான இந்த படம் அந்த காலகட்டத்தில், திருமணமான வீட்டு பெண்களின் favourite ஆக இருந்தது. இந்த படமும், ஹிந்தியில் 2007-ல் வெளியான துமாரி சுலு என்ற படத்தின் ரீமேக்காக உருவானது தான்.

உன்னைப்போல் ஒருவன்: 2008 இல் ஹிந்தியில் எ வெனெஸ்டே எனும் படம் வெளியானது. அந்த படத்தின் ரீமேக் ஆக கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் உன்னைப்போல் ஒருவன் என்று ரீமேக் செய்யப்பட்டது.

பில்லா: அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா. 1978 ஆம் ஆண்டு டான் எனும் படம் ஹிந்தியில் உருவானது, அந்த படத்தின் ரீமேக் தான் ரஜினி மற்றும் அஜித் நடித்த பில்லா படம். இருவர் நடித்த படமும், இந்த ஒரே படத்தின் ரீமேக் ஆக தான் உள்ளது.

நண்பன்: இது நமக்கு தெரிந்த விஷயம் தான். அமீர் கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படம் பார்த்து, ஷங்கருக்கு மிகவும் பிடித்து போய், ரீமேக் செய்து நண்பன் என்று படம் எடுத்தார்.

சேட்டை: 2011 இல் இந்தியில் வெளிவந்த டெல்லி பெல்லி படத்தின் ரீமேக் தான் 2013-ல் ஆர்யா நடிப்பில் வெளியான சேட்டை. இந்த படம் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் ஆகவில்லை என்பது தான் உண்மை

ஒஸ்தி: 2010-ல் சல்மான் கான் நடிப்பில் இந்தியில் வெளிவந்த டபாங் திரைப்படம் தமிழில் 2011 இல் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சிம்பு நடித்த இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

நெற்றிக்கண்: அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் தான் நெற்றிக்கண். இந்த படம் சிறந்த விமர்சனம் பெற்ற படங்களில் ஒன்றாக உள்ளது.

இதுபோல பல படங்கள் ஹிந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டாலும், தமிழில் மக்கள் கவனத்தை பெற்ற படங்கள் இவையெல்லாம் தான்.

Trending News