இந்த வருட கடைசி மாதத்தில் சிக்ஸர் அடிக்க காத்திருக்கும் 6 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பிய அன்னபூரணி

Kollywood movies releasing in December 2023: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் டிசம்பர் மாதம் திரைக்கு வர வரிசை கட்டி காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த வருட கடைசி மாதத்தில் எப்படியாவது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று போட்டி போட்டு படங்களை இறக்க உள்ளனர்.

துருவ நட்சத்திரம் : கௌதம் வாசுதேவ் மேனன்  இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் பல சோதனைகளைக் கடந்து விரைவில் வெளியாக உள்ளது என தகவல்கள் வந்துள்ளது. ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் கௌதம் அவர்கள் ரசிகர்களிடம், உங்களுடைய ஊக்குவிப்பு தூண் மாதிரி பலமாக உள்ளது என்றும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளோம். விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வரப் போவதாகவும் உறுதி அளித்து உள்ளார். மேலும் டிசம்பர் முதல் இரண்டு வாரங்களுக்குள் இப்படம் வெளியாகலாம் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

அன்னபூரணி : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அட்டகாசமான நடிப்பில் டிசம்பர் தொடக்கத்தில் வெளிவர இருக்கும் படம் அன்னபூரணி. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாகவே படத்தின் ட்ரெய்லர் அமைந்தது. தமிழ் ரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாசமான படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நயன்தாராவை தவிர ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

Also read: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.. திரிஷாவுக்கு பல்பு கொடுத்த தி ரோட்

சைரன்: ஜெயம் ரவி படத்தில் கொஞ்சம் வயதான கெட்டப்பில் தோன்றி ரசிகர்களை எதிர்பார்ப்புடன் இருக்க செய்துள்ளார். பழிவாங்கும் படலமாக அமையும் கதையில்  நல்லவனை கெட்டவனாக காட்டாமல், நல்லவனை பழிவாங்கும் பொருட்டு நல்லவனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த ஒன் லைன் படம் பார்க்கும் ஆவலை தூண்டி உள்ளது.  பல தடைகளை தாண்டிய இப்படம் டிசம்பரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சலார்: பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களின் மனசில் பெரிய அளவில் ஒட்டாத பிரபாஸ் சலாம் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்திய மொழிகள் பலவற்றிலும் பிரமாண்டமாக தயாரிக்கப்படும் இப்படம்  கிறிஸ்துமஸ் விடுமுறையை  ஒட்டி டிசம்பர் 22 வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது.

கான்ஜுரிங் கண்ணப்பன்:  சினிமாவில் நகைச்சுவையுடன் கூடிய திரில்லர் கதைகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் தற்போது செல்வின்ராஜ் சேவியர் இயக்கத்தில் காமெடி நடிகர் சதீஷ் மற்றும் ரெஜினா முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் கான்ஜுரிங் கண்ணப்பன். இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. அனைத்து வயதினரையும் திருப்தி செய்யும் பொருட்டு நகைச்சுவையாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் மியூசிக்கல் டாக்டராக சிறப்பு வேடத்தில் யுவன் வருவது நகைச்சுவையே.

பார்க்கிங்: ஹரிஷ்கல்யாண், இந்துஜா மற்றும் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் டிசம்பர் 1 அன்று வெளிவர இருக்கிறது பார்க்கிங். இப்படத்தின் மையக்கரு பார்க்கிங் பிரச்சனை அறிமுக இயக்குனரா என்று ஆச்சரியப்படுத்தும் வகையில் நடிகர்களின் திறமையினை வெளிக்கொண்டு வந்துள்ளார் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது.

Also read: டிசம்பர் மாதத்தில் வெளிவரவுள்ள 5 முக்கியமான படங்கள்.. தடையை தாண்டுமா துருவ நட்சத்திரம்?