பாபிலோனா: பாபிலோனா ஒரு மலையாளி இவர் மலையாள படங்களில் முழுவதிலும் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். இவர் தமிழில் அசத்தல் எனும் படத்தில் மாட்டிற்கு பால் கறக்கும் வேலைக்காரியாக நடித்திருப்பார். இப்படத்தில் இவரை வைத்து எடுக்கப்பட்ட காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன.

விசித்திரா: விசித்ரா முதலில் கவர்ச்சி படங்கள் மட்டுமே நடித்து வந்தார் அதன் பிறகு சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க அதனை பயன்படுத்திக் கொண்டு வீரா, முத்து போன்ற ரஜினிகாந்த் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். அதிலும் குறிப்பாக கவுண்டமணி செந்தில் உடன் விசித்திர வடிவேலு வைத்து காதல் செய்யும் காமெடி காட்சிகள் அனைத்துமே முத்து படத்தில் பெரும் வரவேற்பு பெற்றது.

ஷகிலா: ஷகிலா என்றாலே தெரியாத ஆட்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு தனது கவர்ச்சியின் மூலம் மலையாளத்தை தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். திரைப்படங்களில் நடித்து வந்த ஷகிலா ஒரு சில காலங்களுக்குப் பிறகு காமெடி கதாபாத்திரத்திற்கு கவனம் செலுத்தினார்.

ஜெயம், சிவா மனசுல சக்தி, வல்லக்கோட்டை மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று ஓரளவு ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.
மும்தாஜ்: மும்தாஜ் முதலில் பல படங்களில் படுகவர்ச்சியாக நடித்துள்ளார். அதன் பிறகு குஷி போன்ற படங்களில் கவர்ச்சி நடனமாடி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக் கொண்டு தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி தற்போது வரை ஒரு சில படங்களில் சில காட்சிகள் மூலம் காமெடி செய்து வருகிறார்.

ஷர்மிலி: கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷாமிலிக்கு அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. பின்பு அன்பே அன்பே போன்ற படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி அதன் பிறகு ஒரு சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஷாமிலி நடிப்பில் உருவான அன்பே அன்பே படத்தில் ஷாமிலியிடம் கிச்சு கிச்சு தாம்பலம் விளையாடலாமா என கேட்கும் காட்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

புவனேஸ்வரி: பாய்ஸ் படத்தில் ஒரு கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் புவனேஸ்வரி. அதன் பிறகு ஒரு சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி நடித்தார். பின்பு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததை பயன்படுத்தி பாசமலர், சந்திரலேகா சொர்க்கம் மற்றும் சித்தி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.