வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இரட்டிப்பு லாபம் வந்தே ஆகவேண்டும். ஹீரோக்கள் போடும் பக்கா பிளான்!

சினிமா உலகில் இருக்கும் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் தங்கள் மொழி படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். கமல், ரஜினி, சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால் உட்பட பல ஹீரோக்கள் அதற்கு உதாரணம்.

சில காலங்களுக்கு பிறகு தற்போது இருக்கும் முன்னணி ஹீரோக்கள் அவ்வளவாக மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களின் திரைப்படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு மட்டும் வந்தது. விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள் தமிழ் மொழியிலேயே தொடர்ந்து நடித்து வருகின்றனர்.

தற்போது இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தற்போது தமிழ் ஹீரோக்கள் பலரும் மற்ற மொழிகளில் குறிப்பாக தெலுங்கு நேரடி கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் தனுஷ் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும், நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவான வரலாற்று திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கால் பதித்துள்ளார்.

இவர்களைப் போலவே தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு நேரடி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் சிவகார்த்திகேயன் தெலுங்கு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக உருவாகும் திரைப்படங்களில் தற்போது தமிழ் ஹீரோக்கள் நடிக்க ஆரம்பித்து உள்ளனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே படத்தில் இரட்டிப்பு வருமானம் பார்த்துவிடலாம் என்பதே அவர்களின் நோக்கம்.

தற்போது தளபதி விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News