Wayanad Landslide: சில தினங்களுக்கு முன்பு கேரளா வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியாவையே ஸ்தம்பிக்க வைத்தது. வரலாறு காணாத இந்த துயரத்தில் இருந்து வெளிவர முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் கேரளா அரசும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மீட்பு பணிகள் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண பணிகளுக்காக நிதி உதவி அளித்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே நடிகர் விக்ரம் முதல் ஆளாக ஓடி வந்து இருபது லட்சம் ரூபாய் நிதி உதவி செய்திருந்தார். இது பாராட்டுகளை பெற்ற நிலையில் மற்ற நடிகர்களும் முன்வர வேண்டும் என்ற கருத்துக்கள் தொடர்ந்து வந்தது.
அதன்படி தற்போது தமிழ் ஹீரோக்களும் கேரளாவுக்காக உதவிக்கரம் நீட்டி உள்ளனர். அதன்படி மக்கள் நீதி மைய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கேரளாவை ஸ்தம்பிக்க வைத்த நிலச்சரிவு
மேலும் சூர்யா 25 லட்சமும் கார்த்தி 15 லட்சமும் ஜோதிகா 10 லட்சமும் ராஷ்மிகா மந்தனா 10 லட்சமும் கொடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிட்டி தமிழ்நாடு மாநில குழு 10 லட்சம் ரூபாயும் அளித்துள்ளது. அதேபோல் கேரளாவின் முன்னணி நடிகர்களும் நிதியுதவி செய்து வருகின்றனர்.
ஆனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ரஜினி, விஜய், அஜித் சார்பில் இதுவரை எந்த நிதி உதவியும் கொடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் இவர்களுக்கு கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர்களுடைய படங்கள் அங்கு திருவிழா போல் கொண்டாடப்படும். அப்படி இருக்கும் போது அவர்களுக்காக எந்த உதவியும் செய்யாமல் அவர்கள் அமைதி காப்பது சிறு சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் விரைவில் இவர்கள் தரப்பிலிருந்து இது தொடர்பான செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ் ஹீரோக்கள்
- ஆசை ஆசையாய் வாங்கிய காரை விற்கும் விஜய்
- நிலச்சரிவின் கோரத்தாண்டவம், முதல் ஆளாக ஓடி வந்த விக்ரம்
- கேரளாவை ஸ்தம்பிக்க வைத்த தளபதி