ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பணத்தாசையால் மொத்தத்தையும் இழந்த நடிகைகள்.. சினிமா கற்றுக்கொடுத்த பாடம்

தமிழ் சினிமாவில் நடிகைகள் படங்களில் நடிப்பதை தாண்டியும் பல துறைகளில் கால் பதித்து வெற்றி கண்டுள்ளனர். அதில் ஒரு சில நடிகைகள் தோல்வியையும் சந்தித்துள்ளனர். அந்த வரிசையின் பட்டியலில் தற்போது நமிதா,பானுப்பிரியா, ராதிகா சரத்குமார் மற்றும் ரம்பா போன்றவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

நமிதா: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நமீதா. இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும், அந்த அளவிற்கு கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

namitha-cinemapettai
namitha-cinemapettai

சினிமாவில் வெற்றி பார்த்த நமிதா அதே வெற்றியை ரியல் எஸ்டேட்டில் பார்க்க ஆசை பட்டுள்ளார். அதற்காக தனது சம்பாதித்து அனைத்து பணங்களையும் ரியல் எஸ்டேட்டில் இன்வெஸ்ட்மென்ட் செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால் பின்பு ரியல் எஸ்டேட்டில் இருந்து விலகிவிட்டார்.

பானுப்பிரியா: தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்த பானு பிரியாவிற்கு படங்களை தயாரிப்பதற்கான ஆசை வந்துள்ளது. அதனால் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். அந்த படம் பெரிய அளவில் லாபத்தை சம்பாதித்து கொடுக்காமல் பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளது. இதனால் சினிமாவில் படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் இருந்து விலகியுள்ளார்.

ராதிகா சரத்குமார்: சமீபகாலமாக ராதிகா மற்றும் சரத்குமார் பிஸியாக நடித்து வரும் நடிகர்களாக உருவாகியுள்ளனர். அந்த அளவிற்கு பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளனர். சமீபத்தில் கூட சூர்யாவின் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

sarathkumar-cinemapettai
sarathkumar-cinemapettai

ஆனால் இவர்களும் ஒரு காலத்தில் சொந்த படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்து பல கோடியை இழந்துள்ளனர். ஆனால் இவர்கள் ராடன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு சில படங்களை தயாரித்து நஷ்டமடைந்த பணத்தை அனைத்தையும் புத்திசாலித்தனமாக எடுத்துள்ளனர்.

ரம்பா: 2003 ஆம் ஆண்டு 3 ரோசஸ் எனும் படத்தில் நடித்து சொந்தமாக தயாரித்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக படுதோல்வி அடைந்தது ரம்பாவை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தது.
அதன் பிறகு எந்த படத்தையும் தயாரிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டும் படத்தை நடித்து ஓரளவிற்கு தனது வாழ்க்கையை மீட்டுள்ளார்.

ramba
ramba

இனிமேல் படம் தயாரிப்பிர்களா என கேட்டாள் நான் தயாரித்த வரைக்கும் போதும் இனிமேல் என்னை அழ விடுங்கள் என கூறி இன்று வரை எந்த படத்தையும்  தயாரிக்காமல் அமைதியாகவே இருந்து வருகிறார்.

Trending News