தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் முதலில் ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் வரை சென்று பின்பு ஏதோ ஒரு சில காரணத்தினால் அதனை தவிர்த்து விடுவார்கள் அந்த மாதிரி எந்தெந்த நடிகர்கள் எந்த எந்த படங்களை தவிர்த்து உள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
திருமலை: திருமலை படத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக ஹிந்தி நடிகை அமிர்தா தான் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி ஒரு சில காட்சிகளில் கூட படமாகின. ஆனால் அவரால் தொடர முடியாமல் பின்பு ஜோதிகா நடித்தார். அமிர்தா தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி முதலில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரண்ட்ஸ்: பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் தேவயானி கதாபாத்திரத்திற்கு முதலில் ஜோதிகா நடித்துள்ளார். அதேபோல் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருக்கும் விஜயலட்சுமி கதாபாத்திரத்திற்கு சுவலட்சுமி நடித்துள்ளார். பின்பு நடிக்க முடியாமல் போயிற்று.

ஆடுகளம்: ஆடுகளம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பின்பு புதுமுகம் வேண்டும் என்பதாலும் ஒரு சில காரணங்களாலும் திரிஷாவின் நீக்கிவிட்டு டாப்ஸியை நடிக்க வைத்துள்ளனர்.
தேவர் மகன்: தேவர் மகன் படத்தில் முதலில் ரேவதி கதாபாத்திரத்திற்கு மீனா தான் நடித்துள்ளார்.
நேருக்கு நேர்: நேருக்கு நேர் படத்தில் சூர்யா கதாபாத்திரத்திற்கு முதலில் அஜீத்தான் நடித்துள்ளார். பின்பு ஒரு சில காரணங்களால் சூர்யா நடிக்க வைத்துள்ளனர்.
மனசெல்லாம்: மனசெல்லாம் படத்தில் முதலில் வித்யாபாலன் தான் நடித்துள்ளார். பின்பு ஒரு சில காரணங்களால் த்ரிஷாவை நடிக்க வைத்துள்ளனர்.
உன்னை நினைத்து: முதலில் உன்னை நினைத்து படத்தில் விஜய் நடித்துள்ளார். சில பாடல்கள் கூட படமாக்கினார் பின்பு ஒரு சில காரணங்களால் சூர்யா நடித்தார்.
சந்திரமுகி: சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரத்திற்கு சிம்ரன் தான் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் சூப்பர்ஸ்டார் கூடத்தான் ஜோடியாக நடிப்பேன் என கூறி இப்படத்தில் நடிக்க மறுத்தார் சிம்ரன். பின்பு படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
எந்திரன்: ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எந்திரன் இந்த படத்தில் முதலில் கமல்ஹாசன் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். பின்பு படத்தின் பட்ஜெட் காரணமாக இவர்களால் படத்தில் நடிக்க முடியவில்லை. பின்புதான் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்தனர்.

இரண்டாம் உலகம்: இரண்டாம் உலகம் படத்தில் தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா தான் முதலில் நடித்துள்ளனர். பின்பு ஒரு சில காரணங்களால் ஆர்யா மற்றும் அனுஷ்கா இப்படத்தில் நடித்துள்ளனர்.
நெஞ்சம் மறப்பதில்லை: நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதலில் தனுஷ் சோனியா அகர்வால் தான் நடித்துள்ளனர். பின்பு ஒரு சில காரணங்களால் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார்.