வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பிய 5 வெளிநாட்டு பிரபலங்கள்.. அதுல ரெண்டு கொடூர வில்லன்கள்.!

தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவின் ஒரு பெரும் உயரம் தொட்ட துறை என்பதனை யாராலும் மறுத்திட முடியாது.காரணம் திறமையான அறிமுகங்களை கண்டு ஆகச்சிறந்த திறமைசாலிகளின் திறமைகளை அசால்ட்டாக எடுத்துரைப்பது என்றே கூறலாம்.

அங்கே அமிதாப் என்றால் இங்கே ரஜினிகாந்த் அங்கே சல்மான் அமீர் என்றால் இங்கோதலதளபதி இதனை அத்தனை எளிதில் மாற்றிட முடியாது. இந்திய சினிமாவிலேயே அதிகமான படங்கள் ரீமேக் செய்யப்படுவது தமிழ் சினிமாவில் இருந்து தான் என்றால் மறுப்போர் உண்டோ. அதே போல நம் தமிழ் சினிமா வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் திறமையானவர்களாய் இருந்தால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயங்குவதில்லை அவர்களில் சிலர்.

எமி ஜாக்சன்: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதாராசப்பட்டினம் படத்தின் வாயிலாய் அறிமுகம் கண்டவர் லண்டனை சேர்ந்த எமி. சுதந்திர போராட்ட காலத்தில் இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷார்களில் ஒருவராய் இருப்பார்.ஆர்யா வசம் காதல் மலரவே நல்ல ரொமாண்டிக் படமாக அமைந்தது மதாராசப்பட்டினம் ெதொடர்ந்து தாண்டவம் கெத்து ஐ தங்கமகன் உட்பட சில படங்களில் நடித்திருந்தார்.

amy-jackson-cinemapettai

சன்னி லியோன்: பார்ன் வீடியோக்களை ஆட்சி செய்த அரசி என்ற மக்காப்புகழுக்கு சொந்தக்காரர் எமி ஜாக்சன் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பே சில இந்தி ஆல்பங்களில் வந்து சென்றவருக்கு வடகறி படத்தின் ஐட்டம் சாங் வேற லெவல் திறமையை காட்டியது.

ஜானி டிரி ங்குயேன்: முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.தமிழ் மக்களை பொறுத்த வகையி்ல் டான் லீ என்று சொன்னாலே அறியப்படும் முகமாய் அமைந்தார் ஜானி.

டேனி சப்பானி: தமிழ் சினிமாவின் முதல் முறையாக மூன்று பாகங்கள் எடுக்கப்பட்ட படம் என்கிற புகழக்கு சொந்தமாகிறது சூர்யா ஹரி கூட்டணியின் சிங்கம் வெர்சன். பாகம் இரண்டின் டானி என்கிற டிரக் டீலர் கேரக்டருக்கு சரியாக பொறுந்தி இருந்தார் ஜானி சப்பானி. படத்தின் ஒவ்வொரு நகர்விலும் சூர்யாவுக்கு நிகரான பலத்துடன் காட்டப்பட்டிருப்பார்

லாஸ்லியா: தமிழ் சின்னத்திரைகளின் நேரத்தை வெகுவாக கவர்ந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் சீசனுக்கு பிறகு பேசப்படும் விடயமாக இருந்தது லாஸ்லியாவின் பேரழகு. இந்த அழகிக்கு பிக்பாஸ் முடிந்த கையோடு அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் வந்ததை யாரும் மறுத்திட முடியாது.

இப்போது ஹர்பஜன் சிங் அறிமுகமாகும் ப்ரண்ட்ஷிப் படத்தில் முதல் வெள்ளித்திரை அறிமுகம் கானவிருக்கிறார் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் தமிழ் பேசும் வெளிநாட்டவர்.

Trending News